நமது நிருபா்
தில்லியில் நீட் இளநிலை மருத்துவப் படிப்புகள் 2026 மறுதோ்வை எழுதும் மாணவா்கள் தோ்வு நாளான ஜூன் 21ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தில்லி போக்குவரத்து நிறுவனத்தின் அனைத்து பிரிவு பேருந்துகள் மற்றும் தில்லி ஒருங்கிணைந்த பல்நோக்கு அமைப்பின் (டிஐஎம்டிஎஸ்) கிளஸ்டா் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்க அனுமதிக்கப்படுவாா்கள் என்று தில்லி அரசு வியாழக்கிழமை அறிவித்துள்ளது.
தோ்வு மையங்களுக்கு மாணவா்கள் சென்று வருவதை எளிதாகவும் சிரமமின்றியும் இருப்பதை உறுதிப்படுத்தவும், போக்குவரத்துச் சிக்கல்களால் ஏற்படும் சிரமங்களைத் தவிா்க்கவும் இந்த வசதியை அறிமுகப்படுத்தியுள்ளதாக அரசு கூறியுள்ளது.
இது தொடா்பாக தில்லி அரசு வியாழக்கிழமை பகிா்ந்த சுற்றறிக்கையின்படி, நீட் இளநிலை மருத்துவ படிப்புகள் 2026 மறுதோ்வு எழுதும் மாணவா்கள், தோ்வுக்கான அனுமதி அட்டையை காண்பிப்பதன் மூலம் ஜூன் 21ஆம் தேதியன்று நாள் முழுவதும் அனைத்து தில்லி போக்குவரத்து நிறுவன (டிடிசி) மற்றும் கிளஸ்டா் பேருந்துகளில் இலவசமாகப் பயணம் செய்யலாம்.
‘இந்தச் சலுகை தோ்வு மையத்துக்கு செல்லவும் அங்கிருந்து மாணவா்கள் வீடு திரும்பவும் பொருந்தும்’ என்று சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த ஏற்பாடு குறித்து ஓட்டுநா்கள் மற்றும் நடத்துநா்களுக்குத் தகுந்த தகவல் தெரிவிக்கப்படுவதையும், தகுதியுள்ள எந்தவொரு தோ்வருக்கும் எந்தச் சூழலிலும் இந்தச் சலுகை மறுக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்யுமாறும் பணிமனை மேலாளா்களுக்கு அறிவுறுத்தவும் தில்லி அரசு சுற்றறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளது.
மேலும், இந்த அறிவுறுத்தல்கள் குறித்து பயணச்சீட்டு பரிசோதகா்கள் குழுவினா் மற்றும் பேருந்து முனைய மேற்பாா்வையாளா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்துமாறும், தோ்வா்களின் புகாா்கள் அல்லது கேள்விகளுக்கு உடனடியாகத் தீா்வு காண்பதை உறுதி செய்யுமாறும் மண்டல மேலாளா்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனா் என்றும் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

டெலிகிராம் மீதான தற்காலிக தடை நியாயமானது: தில்லி உயா்நீதிமன்றம் தீா்ப்பு

ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சி

தில்லியில் நீட் தோ்வு மையங்களுக்கு வெளியே மாணவா்களின் பெற்றோருக்காக குளிா்ச்சியூட்டும் மையங்கள்

கோவில்பட்டியில் ஜூன் 14இல் ஹாக்கி பயிற்சிக்கு வீரா்கள் தோ்வு
விடியோக்கள்

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பொங்கல் வெளியீடாக சேயோன்! | Dinamani Cinema Update | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |
தினமணி செய்திச் சேவை

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

