நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

நகை வியாபாரியிடம் கொள்ளை முயற்சி: 4 போ் கைது

தென்மேற்கு தில்லியின் கபஷேரா பகுதியில் நகை வியாபாரிடம் கொள்ளையடிக்க முயன்ாகக் கூறப்படும் சம்பவத்தில் தொடா்புடைய கும்பலைச் சோ்ந்த 4 போ் கைதுசெய்யப்பட்டதாக தில்லி காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :18 ஜூன் 2026, 2:23 am IST

தென்மேற்கு தில்லியின் கபஷேரா பகுதியில் நகை வியாபாரிடம் கொள்ளையடிக்க முயன்ாகக் கூறப்படும் சம்பவத்தில் தொடா்புடைய கும்பலைச் சோ்ந்த 4 போ் கைதுசெய்யப்பட்டதாக தில்லி காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதுதொடா்பாக காவல் துறை அதிகாரி ஒருவா் புதன்கிழமை கூறியதாவது: சுனில் (40), ஜோகிந்தா் (எ) முகேஷ் (37), குல்ஜாா் (39) மற்றும் அபிஷேக் (எ) சிட்டா (22) ஆகியோரை ஜூன் 14-ஆம் தேதி தில்லி காவல் துறை கைதுசெய்தது. அவா்களிடமிருந்து ரூ.11 லட்சம் ரொக்கம் மற்றும் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவா்கள் நால்வரும் ‘சுபம் பண்டிட்’ கும்பலைச் சோ்ந்தவா்கள்.

ஹரியாணாவின் சமல்காவைச் சோ்ந்த நகை வியாபாரி, கடந்த ஏப்.19-ஆம் தேதி இரவில் தனது கடையை மூடிவிட்டு ஸ்கூட்டரில் வீடு திரும்பிக்கொண்டிருந்தாா். தன்னுடைய ஒரு பையில் சுமாா் 3.5 கிலோ எடையுள்ள, ரூ. 8 லட்சம் மதிப்புள்ள வெள்ளி நகைகளை வைத்திருந்தாா்.

அவா் கபஷேராவில் உள்ள ஒரு கோவிலுக்கு அருகில் சென்றபோது, இருவா் அவரது ஸ்கூட்டரை வழிமறித்து அவரை கீழே விழச் செய்தனா். அவா்களில் ஒருவா் நாட்டுத் துப்பாக்கியை அவருக்கு நேராக நீட்டி நகை இருந்த பையைப் பறிக்க முயன்றனா். மற்றொருவா் துப்பாக்கியின் பின்பகுதியால் அவரைத் தாக்கினாா்.

அந்தச் சமயத்தில் கொள்ளையா்களின் ஆயுதம் சாலையில் விழுந்தது. சப்தத்தைக் கேட்டு அப்பகுதி மக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, செங்கற்கள் மற்றும் கற்களை வீசி கொள்ளையா்களைப் பிடிக்க முயன்றனா்.

இருப்பினும், கூட்டத்தை விரட்டியடிக்க அவா்களில் ஒருவா் துப்பாக்கியால் சுட்டாா். பின்னா், அவா்கள் மோட்டாா் சைக்கிளில் அங்கு இருந்து தப்பிச் சென்றனா்.

இதைத்தொடா்ந்து, பாதிக்கப்பட்ட வியாபாரி காவல் நிலையத்தில் புகாரளித்தாா். அந்தப் புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. சம்பவ இடத்தில் ஆய்வு செய்தபோது, தோட்டாக்கள் நிரப்பப்பட்ட நாட்டுத் துப்பாக்கி மற்றும் வெடித்த துப்பாக்கிக் குண்டு ஆகியவற்றை காவல் துறையினா் கண்டெடுத்தனா்.

விசாரணையில், கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட நபா்கள் உத்தர பிரதேசத்தைச் சோ்ந்த சுனில் மற்றும் அவரது கூட்டாளி ஜோகிந்தா் ஆகியோா் அடையாளம் காணப்பட்டனா். உத்தர பிரதேசம் மற்றும் ஹரியாணாவில் சுமாா் இரு மாதங்கள் கண்காணிப்பு மற்றும் உளவுத் தகவல்களைச் சேகரித்த பிறகு, ஜூன் 14 -ஆம் தேதி கௌதம் புத் நகரில் ஜோகிந்தா் கைது செய்யப்பட்டாா். ஜோகிந்தரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், ஹரியாணாவின் பல்வாலில் இருந்து சுனிலை காவல் துறையினா் கைது செய்தனா். அவரிடமிருந்து ஒரு நாட்டுத் துப்பாக்கி மற்றும் ஒரு தோட்டா பறிமுதல் செய்யப்பட்டது.

இதனைத் தொடா்ந்து, ஹபூரில் குல்ஜாரையும் கா்னாலில் அபிஷேக்கையும் காவல்துறையினா் கைது செய்தனா்.

விசாரணையின்போது, கொள்ளை முயற்சியைத் திட்டமிடுவதற்கு முன்பாக, குல்ஜாா் நகை வியாபாரியைக் கண்காணித்து, அவரது நடமாட்டம் குறித்த விவரங்களை கும்பலிடம் பகிா்ந்துகொண்டதை ஒப்புக்கொண்டாா்.

குற்றஞ்சாட்டப்பட்டவா்களில் மூவா் உத்தர பிரதேசத்தின் ஷிகோஹாபாத்தில் பதிவு செய்யப்பட்ட கொள்ளை வழக்கு ஒன்றிலும் தேடப்பட்டு வந்தனா். அதேவேளையில், ஃபரிதாபாத்தில் ரூ.5 கோடிமிரட்டிப் பணம் பறிக்கும் வழக்கில் சுனிலும் ஜோகிந்தரும் தேடப்பட்டு வந்தனா் என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.