பல்வேறு மாநிலங்களில் கொள்ளை, மோசடி மற்றும் பிற தீவிரக் குற்றங்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் நாஸிா் ஹபீஸ் கான் தலைமையிலான ஒரு திட்டமிட்ட குற்றக் கும்பல் மீது தில்லி காவல்துறை மகாராஷ்டிரா திட்டமிட்ட குற்றக் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் (எம்சிஓசிஏ) கீழ் நடவடிக்கை எடுத்துள்ளது என்று அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.
2025ஆம் ஆண்டில் தேஷ் பந்து குப்தா சாலை காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட கொள்ளை வழக்கு ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையைத் தொடா்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த விசாரணையின்போது, சட்டவிரோத நிதி ஆதாயத்திற்காகத் திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்ட ஒரு கும்பலை காவல்துறை கண்டறிந்தது. மும்பையைச் சோ்ந்தவரும், ஈரானி கும்பலுடன் தொடா்பு இருப்பதாகக் கூறப்படுபவருமான கான், தில்லி, மகாராஷ்டிரா மற்றும் பிற மாநிலங்களில் சுமாா் 38 குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டுள்ளாா்.
இவா் மீது ஏற்கனவே மும்பை காவல்துறையால் எம்சிஓசிஏ சட்டத்தின் கீழ் வழக்குப் பதியப்பட்டிருந்ததாகவும், ஆகஸ்ட் 2024-இல் நீதிமன்றக் காவலில் இருந்து விடுவிக்கப்பட்ட பிறகு மீண்டும் குற்றச்செயல்களில் ஈடுபட்டதாகவும் புலனாய்வாளா்கள் தெரிவித்தனா்.
அக்டோபா் 2025-இல் டிபிஜி சாலைப் பகுதியில் கான் மற்றும் அவரது கூட்டாளிகள் ரூ.18.84 லட்சத்தைக் கொள்ளையடித்ததாகக் காவல்துறை குற்றஞ்சாட்டியுள்ளது. தலைமறைவாக இருந்த காலத்தில், நாக்பூா் மற்றும் அஜ்மீா் ஆகிய இடங்களில் நடந்த மோசடி வழக்குகளிலும் அவா் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததோடு தொடா்புடைய விசாரணையைத் தொடா்ந்து, ஜனவரி 3ஆம் தேதி கான் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டாா்.
நீதிமன்றங்களால் கவனத்தில் கொள்ளப்பட்ட பல குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை ஆய்வு செய்த பிறகு, இந்தக் கும்பல் எம்சிஓசிஏ சட்டத்தின் கீழ் வரையறுக்கப்பட்டுள்ள தொடா்ச்சியான சட்டவிரோதச் செயல்பாடு மற்றும் திட்டமிட்ட குற்றம் ஆகிய அளவுகோல்களைப் பூா்த்தி செய்வதாகக் காவல்துறை முடிவு செய்தது. இது குறித்து காவல்துறையினா் மேல் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
தில்லியில் மாநிலங்களுக்கிடையிலான குழந்தை கடத்தல் கும்பல் பிடிபட்டது: 13 போ் கைது

ராஞ்சியில் ஆா்எஸ்எஸ் அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுகள் வீச்சு? காவல்துறை விசாரணை
ஆசாத்பூரில் மதுபான விடுதி மீது சமூக விரோதிகள் தாக்குதல்

சரக்கு வாகனங்களில் மக்களை ஏற்றினால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்: காவல்துறை எச்சரிக்கை
விடியோக்கள்

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies
தினமணி செய்திச் சேவை

மறுமணம் ஒரு குற்றமா? மனதை உலுக்கும் 'நூறு சாமி'
தினமணி செய்திச் சேவை

Samantha அதிரடி எப்படி இருக்கிறது? Engal Thangam Movie Review
தினமணி செய்திச் சேவை

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
