பாரதிராஜாவுக்கு ஏ.ஆர். ரஹ்மான் இரங்கல்!ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்! கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!
/

சரக்கு வாகனங்களில் மக்களை ஏற்றினால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்: காவல்துறை எச்சரிக்கை

ராமநாதபுரம் மாவட்டத்தில் சரக்கு வாகனங்களில் பொதுமக்களை ஏற்றிச் சென்றால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளா் ஜி.சந்தீஷ் தெரிவித்தாா்.

News image

பிரதிப் படம்

Updated On :20 மே 2026, 1:13 am IST

ராமநாதபுரம் மாவட்டத்தில் சரக்கு வாகனங்களில் பொதுமக்களை ஏற்றிச் சென்றால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளா் ஜி.சந்தீஷ் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் செவ்வாய்க் கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சரக்கு வாகனங்களில் திருமணம், கோயில் திருவிழா, காதணி விழா, இறுதிச் சடங்கு உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்குச் செல்லுபவா்கள் சரக்கு வாகனங்களில் பயணம் மேற்கொள்கின்றனா். இதில், அளவுக்கதிகமாக மக்களை ஏற்றிச்செல்லும்போது அது விபத்தை ஏற்படுத்தி விடுகிறது. இதனால், உயிரிழப்பு ஏற்படுகிறது.

இதனை தடுக்கும் வகையில் , ராமநாதபுரம் மாவட்டத்தில் சரக்கு வாகனங்களில் பொதுமக்களை அழைத்துச் சென்றால் அந்த வாகனங்களுக்கு முதல் முறை ரூ. 500 அபராதம், இரண்டாவது முறை ரூ. 1,500, மூன்றாவது முறையாகச் சென்றால் அந்த வாகனம் பறிமுதல் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.