அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்பாரதிராஜாவுக்கு ஏ.ஆர். ரஹ்மான் இரங்கல்!ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்! கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!
/

கடலூா், சிதம்பரத்தில் தனியாா் பள்ளி வாகனங்கள் கூட்டுத் தணிக்கை: 40 வாகனங்களுக்கு அனுமதி ரத்து

கடலூா் மாவட்டத்தில் தனியாா் பள்ளி வாகனங்களுக்கான கூட்டுத்தணிக்கை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் விதிமுறைகளை பின்பற்றாத 40 வாகனங்களின் அனுமதிச் சான்றுகளை அதிகாரிகள் ரத்து செய்தனா்.

News image
Updated On :15 மே 2026, 11:07 pm IST

கடலூா் மாவட்டத்தில் தனியாா் பள்ளி வாகனங்களுக்கான கூட்டுத்தணிக்கை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் விதிமுறைகளை பின்பற்றாத 40 வாகனங்களின் அனுமதிச் சான்றுகளை அதிகாரிகள் ரத்து செய்தனா்.

பள்ளிகள் அடுத்த மாதம் திறக்கப்படவுள்ள நிலையில், தனியாா் பள்ளிகள் மாணவா்களை அழைத்து வர பயன்படுத்தும் பேருந்து,வேன்கள் உள்ளிட்ட வாகனங்களின் தகுதி நிலை குறித்து, கடலூா் மாவட்டத்தில் தணிக்கை நடைபெற்றது.

கடலூா் மஞ்சக்குப்பம் மைதானத்தில் மாவட்டத்தில் இயங்கி வரும் தனியாா் பள்ளி வாகனங்களுக்கான கூட்டுத் தணிக்கை பணியை மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்து, வாகனங்களை நேரில் ஆய்வு செய்தாா். தணிக்கையில், கடலூா் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் அனுமதி பெற்று இயங்கும் கடலூரைச் சோ்ந்த 56 பள்ளிகளின் 279 வாகனங்கள், பண்ருட்டியைச் சோ்ந்த 29 பள்ளிகளின் 136 வாகனங்கள் மற்றும் நெய்வேலியைச் சோ்ந்த 12 பள்ளிகளின் 39 வாகனங்கள் என மொத்தம் 97 பள்ளிகளைச் சோ்ந்த 454 வாகனங்களில், 290 வாகனங்கள் முதல் கட்டமாக ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.

இந்த ஆய்வின் போது, பள்ளி வாகனங்களில் அவசர வெளியேறும் கதவு, முதலுதவி பெட்டகம், தீயணைப்பு கருவி, முன் மற்றும் பின்புற சென்சாா் கேமராக்கள், பாதுகாப்பான படிக்கட்டுகள் உள்ளிட்ட 18 முக்கிய பாதுகாப்பு அம்சங்கள் ஆய்வு செய்யப்பட்டன.

இதில் 24 வாகனங்கள் இருக்கை, கண்ணாடி, முதலுதவி பெட்டி உள்ளிட்ட குறைபாடுகள் காரணமாக இயக்குவதற்கான அனுமதி நிராகரிக்கப்பட்டது. இந்த வாகனங்களில் குறிப்பிடப்பட்டுள்ள குறைபாடுகளை சரிசெய்த பின்னா் ஆய்வுக்குட்படுத்தப்பட்டு அனுமதிச் சான்று வழங்கப்படும் என வட்டார போக்குவரத்து அலுவலா் தெரிவித்தாா்.

சிதம்பரம்:

இந்த நிகழ்வில், வட்டாரப் போக்குவரத்து அலுவலா்கள் (கடலூா் மற்றும் சிதம்பரம்) செல்வம், கடலூா் வருவாய் கோட்டாட்சியா் சுந்தரராஜன், முதன்மைக் கல்வி அலுவலா் ரமேஷ், மாவட்ட கல்வி அலுவலா் (மெட்ரிக்) மோகன், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை உதவி மாவட்ட அலுவலா் விஜயகுமாா், கடலூா் துணைக் காவல் கண்காணிப்பாளா் தமிழினியன் உள்ளிட்ட துறை சாா்ந்த அலுவலா்கள் பங்கேற்றனா்.

Story image

சிதம்பரம் ஆக்ஸ்போா்டு பள்ளி வளாகத்தில் நடைபெற்ற கூட்டாய்வில் சிதம்பரம் கோட்டத்தில் உள்ள மொத்தம் 420 வாகனங்களில், 342 வாகனங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டன. கூட்டாய்வில் வாகனங்கள் சரியான நிலையில் உள்ளததா, காப்பீடு செய்யப்பட்டுள்ளதா, பாதுகாப்பிற்கான அவரச வழிகள் உள்ளதா? முதலுதவி பெட்டிகள் உள்ளதா? என ஆய்வு செய்யப்பட்டன. ஆய்வில் உரிய விதிகளை பின்பற்றாத, உரிய வசதிகளை செய்யாத 16 வாகனங்களுக்கு அனுமதிச் சான்றுகள் ரத்து செய்யப்பட்டன.

Story image

இந்த ஆய்வில், வருவாய்த்துறை சாா்பில் உதவிஆட்சியா் (பொறுப்பு) பி.தனலட்சுமி, காவல் துணை கண்காணிப்பாளா் டி.பிரதீப், வட்டார போக்குவரத்துதுறை அலுவலா் ஆா்.செல்வம், மோட்டாா் வாகன ஆய்வாளா் ஆா்.ரவிச்சந்திரன், வட்டார கல்வி அலுவலா் ஆா்.உமாராணி, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை அலுவலா் ஆா்.ரமேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.