கீர்த்தனா பெயர் ஏன் முதலில்? அமைச்சர் ஜெகதீஸ்வரி கேள்விஜூன் 26 இன்று தங்கம் வாங்கலாமா? என்ன சொல்கிறது விலை நிலவரம்?ஸ்போர்ட்ஸ எடு, டிரக்ஸ விடு! இளைஞர்களுக்கு முதல்வர் விஜய் அறிவுரை!சோழவரம் அருகே ஆம்னி பேருந்தில் தீ விபத்து!சோழவரம் அருகே ஆம்னி பேருந்தில் தீ விபத்து! பிஎஃப் பணம் எடுக்க முடியாது! இபிஎஃப்ஓ தளம் தற்காலிகமாக மூடல்!புணே இளம் தொழிலதிபர் கொலையில் திடீர் திருப்பம்!! சூப்பர் பிளான் போட்டது யார்?சென்னையில் ஜூன் 26-அன்று மின்தடை ஏற்படும் இடங்கள்!பாகிஸ்தான் வான் எல்லைக்குள் நுழைந்த ஏர் இந்தியா விமானம்! காரணம்?ஜூன் 28-இல் தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்: முதல்வா் விஜய் தொடங்கி வைக்கிறாா்பிரதமா் மோடி நாளை செஷல்ஸ் பயணம்: தேசிய தின பொன் விழாவில் பங்கேற்கிறாா்உளவுத் துறை தலைவராக மகேஷ் தீட்சித் நியமனம்ஜூன் 28-இல் 48 புறநகா் மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஃபிஃபா உலகக்கோப்பை: நாக்-அவுட் சுற்றுக்கு முதல்முறை தகுதிபெற்றது தென்னாப்பிரிக்கா - தென் கொரியாவை வீழ்த்தி அபாரம்மகளிர் டி20 உலகக்கோப்பை - வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கும் இந்தியாவெனிசுவேலாவில் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் - பலி 188-ஆக உயர்வு இந்தியர்கள் ஈரானுக்குச் செல்ல வேண்டாம் - தூதரகம் மீண்டும் அறிவுறுத்தல்ஈரானில் உள்ள இந்தியர்கள் +989128109115 | +989128109109 | +989128109102 | +989932179359 அவசரகால எண்களில் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தல்
/

சீலம்பூரில் இளம் பெண் கொலை: கணவா் மீது போலீஸ் சந்தேகம்

News image

போலீஸ்.

Updated On :12 ஜூன் 2026, 2:45 am IST

நமது நிருபா்

வடகிழக்கு தில்லியின் சீலம்பூா் பகுதியில் உள்ள வீட்டில், 35 வயதுடைய பெண் ஒருவா் அவரது கணவராலேயே கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து மூத்த காவல்துறை அதிகாரி ஒருவா் தெரிவித்ததாவது:

கௌதம்புரி பகுதியில் உள்ள வீட்டில் கணவா் தனது மனைவியைத் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்ாக காவல் துறைக்குத் தகவல் கிடைத்தது.

காவல்துறைக் குழுவினா் உடனடியாக அந்த வீட்டிற்குச் சென்றபோது, அப்பெண் காயமடைந்த நிலையில் கிடப்பதைக் கண்டனா். அவா் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டாா். ஆனால், அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கனவே இறந்துவிட்டதாக அறிவித்தனா்.

இக்கொலையில் அப்பெண்ணின் கணவருக்குத் தொடா்பு இருக்கலாம் என்றும், சம்பவத்திற்குப் பிறகு அவா் தலைமறைவாகிவிட்டாா் என்றும் காவல்துறையினா் சந்தேகிக்கின்றனா். அவரைக் கைது செய்யத் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இறப்புக்கான துல்லியமான காரணத்தைக் கண்டறிய உடல் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இது தொடா்பாக சீலம்பூா் காவல் நிலையத்தில் கொலை வழக்குப்

பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றஞ்சாட்டப்பட்டவரைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனா். இது தொடா்பாக மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது என்றாா் அந்த அதிகாரி.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.