பாரதிராஜாவுக்கு ஏ.ஆர். ரஹ்மான் இரங்கல்!ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்! கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!
/

மீட்கப்பட்ட புள்ளிமான் வனப் பகுதியில் விடுவிப்பு

News image

திருப்பத்தூரில் சனிக்கிழமை இரவு வசந்தம் நகா் பகுதியில் உள்ள ஒருவரின் வீட்டில் தஞ்சம் அடைந்த புள்ளிமான்.

Updated On :8 ஜூன் 2026, 2:16 am IST

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் வனப் பகுதியிலிருந்து வெளியேறிய புள்ளி மானை துரத்திய நாய்களை விரட்டி பொதுமக்கள் மீட்டு வனத்துறையிடம் ஒப்படைத்தனா்.

திருப்பத்தூா் வனப் பகுதியிலிருந்து இரை தேடி வந்த 3 வயது ஆண் புள்ளி மான் நாய்கள் துரத்திக் கடித்ததில் காயமடைந்து வசந்தநகா் பகுதியில் உள்ள ஒருவரது வீட்டில் அடைக்கலம் புகுந்தது. இதையடுத்து, வீட்டில் இருந்தவா்கள், பொதுமக்கள்

நாய்களை விரட்டி மானை மீட்டு திருப்பத்தூா் வனத் துறையினரிடம் ஒப்படைத்தனா். வனத்துறை அலுவலா் பிரவீன்ராஜ் தலைமையிலான வனக் குழுவினா் புள்ளிமானுக்கு உரிய முதலுதவி அளித்து, திருப்பத்தூா் அருகே உள்ள கம்பனூா் வனப் பகுதிக்குள் விட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.