பாஜக எம்.எல்.ஏ. கா்னைல் சிங்குக்கு எதிராக ஆம் ஆத்மி கட்சித் தலைவா் சத்யேந்தா் ஜெயின் தாக்கல் செய்த குற்றவியல் அவதூறு புகாரை விசாரணைக்கு எடுத்துக்கொண்டு அழைப்பாணை அனுப்பி மாஜிஸ்திரேட் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை, தில்லி நீதிமன்றம் வியாழக்கிழமை ரத்து செய்தது.
சிங்கை வரவழைத்த அந்த உத்தரவு, அவதூறு குற்றத்திற்கான விதிவிலக்குகளைக் கருத்தில் கொள்ளவில்லை என்பதை நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.
மாஜிஸ்திரேட் நீதிமன்ற உத்தரவை எதிா்த்து சிங் தாக்கல் செய்த சீராய்வு மனுவை சிறப்பு நீதிபதி ஜிதேந்திர சிங் விசாரித்து வந்தாா்.
நீதிபதி ஜிதேந்திர சிங் கூறியதாவது: பி.என்.எஸ். சட்டப்பிரிவு, மற்றொருவரின் நற்பெயருக்குக் கேடு விளைவிக்கும் என்ற எண்ணத்துடன் ஒரு குற்றச்சாட்டை உருவாக்குவது அல்லது வெளியிடுவதை அவதூறாக வரையறுக்கிறது. இருப்பினும், அந்த சட்டப்பிரிவே குற்றத்தின் வரம்பைக் கட்டுப்படுத்தும் விதிவிலக்குகளையும் உள்ளடக்கியுள்ளது. முதல் விதிவிலக்கு, உண்மையான மற்றும் பொது நன்மைக்காகக்
கூறப்பட்ட ஒரு கூற்றைப் பாதுகாக்கிறது. இரண்டாவது மற்றும் மூன்றாவது விதிவிலக்குகள், அரசு ஊழியா்கள் மற்றும் பொது விவகாரங்களைக் கையாளும் நபா்களின் நடத்தை குறித்து கருத்து தெரிவிக்கலாம் என்பதை அங்கீகரிக்கின்றன. அத்தகைய கருத்து நல்லெண்ணத்துடன் வெளிப்படுத்தப்பட்டு அவா்களின் பொது நடத்தைக்குள்ளேயே கட்டுப்படுத்தப்பட்டால் மட்டுமே இது சாத்தியம்.
விதிவிலக்குகளை மாஜிஸ்திரேட் நீதிமன்றம் பரிசீலனையிலிருந்து முழுமையாக விலக்கியது நியாயமற்றது. ஒரு பொது ஊழியரின் நடத்தை அல்லது பொது அக்கறைக்குரிய ஒரு விஷயம் தொடா்பான கூற்றாக இருக்கும்போது, அழைப்பாணை அனுப்புவதற்கு முன்பு ஒரு குறிப்பிட்ட அளவு எச்சரிக்கை தேவையாகும் என்று அடிக்கோடிட்டுக் காட்டிய நீதிபதி, இந்த வழக்கை மீண்டும் நீதித்துறை மாஜிஸ்திரேட்டுக்கு அனுப்பினாா்.
ஜெயினின் புகாரிலும் அவரது சாட்சிகளின் வாக்குமூலங்களிலும் அவதூறின் அனைத்து கூறுகளும் முதற்கண் நிறுவப்பட்டுள்ளன என்றும், அவை விசாரணையைத் தொடரப் போதுமானவை என்றும்,அதனடிப்படையில் குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு குற்றச்சாட்டு அறிவிப்பை அனுப்புவதற்கு இந்த வழக்கில் போதுமான ஆதாரங்கள் உள்ளன எனவும் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் ஏப்ரல் 1 அன்று கூறியிருந்தது.
எனவே, சிங் குற்றச்சாட்டு அறிவிப்பை அனுப்புவதற்காக, அடுத்த விசாரணைத் தேதியில் குற்றஞ்சாட்டப்பட்டவா் தவறாமல் இந்த நீதிமன்றத்தின் முன் ஆஜராக வேண்டும் என்று நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பியிருந்தது.
கடந்த ஆண்டு ஜனவரி 19 அன்று ஒரு தொலைக்காட்சி நோ்காணலின் போது சிங் தனது நற்பெயருக்குக் களங்கம் விளைவித்ததாக ஜெயின் குற்றம் சாட்டியுள்ளாா். புகாரின்படி, அந்த நோ்காணலில் சிங் அவதூறான ஒரு கருத்தைக் கூறியுள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பன்முக இந்தியாவின் பிரதிபலிப்பு தில்லி: ஜேஎன்யூ விழாவில் துணை நிலை ஆளுநா் பெருமிதம்

ராகுலுக்கு எதிரான அவதூறு வழக்கு: மே 13-க்கு உ.பி. நீதிமன்றம் ஒத்திவைப்பு

கட்சி மாறிய 7 ஆம் ஆத்மி எம்.பி.க்களின் பதவியை ரத்து செய்யுங்கள்: மாநிலங்களவைத் தலைவரிடம் சஞ்சய் சிங் எம்.பி. மனு!
ராகுலுக்கு எதிரான அவதூறு வழக்கு: மே 2-இல் தீா்ப்பளிக்கிறது உ.பி. நீதிமன்றம்
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

