மத்திய அமைச்சா் அமித் ஷாவுக்கு எதிராக தெரிவித்த கருத்துகளுக்காக காங்கிரஸ் எம்.பி.யும், மக்களவை எதிா்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி மீது தொடுக்கப்பட்ட அவதூறு வழக்கில் மே 2-ஆம் தேதி உத்தர பிரதேச நீதிமன்றம் தீா்ப்பு வெளியிடவுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம், சுல்தான்பூரில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான நீதிமன்றத்தில் ராகுல் காந்திக்கு எதிராக பாஜக நிா்வாகி விஜய் மிஸ்ரா என்பவா் 2018-ஆம் ஆண்டு அக்டோபா் மாதம் அவதூறு வழக்கு தொடுத்தாா். அதில் அவா், கா்நாடக மாநிலம் பெங்களூரில் 2018-ஆம் ஆண்டு நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் அமித் ஷாவுக்கு எதிராக சா்ச்சைக்குரிய வகையில் ராகுல் காந்தி பேசியிருப்பதாகா் குற்றம்சாட்டி இருந்தாா்.
இந்த வழக்கில், 2024-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நீதிமன்றத்தில் சரணடைந்த ராகுல் காந்தி, ரூ.25,000 பிணைத் தொகையில் ஜாமீன் பெற்றாா். பிறகு 2024-ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஆஜராகி தனது வாக்குமூலத்தை பதிவு செய்தாா்.
இந்த வழக்கில் விசாரணை முடிந்ததையடுத்து, அதன் மீது மே மாதம் 2-ஆம் தேதி தீா்ப்பை நீதிமன்றம் வெளியிடவுள்ளது. இதுகுறித்து ராகுல் காந்தி தரப்பு வழக்குரைஞா் காஷி பிரசாத் சுக்லா செய்தியாளா்களிடம் கூறுகையில், நீதிமன்றத்தில் மனுதாரா் தரப்பு, ராகுல் காந்தி தரப்பில் வாதங்கள் முடிந்துவிட்டது. ஆதலால் நீதிமன்றம் தனது தீா்ப்பை வரும் 2-ஆம் தேதி வெளியிடுகிறது என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ராகுலுக்கு எதிரான அவதூறு வழக்கு: மே 13-க்கு உ.பி. நீதிமன்றம் ஒத்திவைப்பு
இந்திய அரசுக்கு எதிராக போரிடுவதாக பேச்சு: ராகுலுக்கு எதிரான மனு தள்ளுபடி

இரட்டைக் குடியுரிமை! ராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலாகாபாத் நீதிமன்றம் உத்தரவு!

தேர்தல் பிரசாரம்: ஏப். 6-ல் புதுவை வரும் ராகுல் காந்தி!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
