ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

நொய்டாவில் கைதான தொழிலாளா்களை விடுவிக்க உரிமைகள் அமைப்பு கோரிக்கை

News image
Updated On :29 ஏப்ரல் 2026, 3:48 am IST

தேசியத் தலைநகா் வலயம், நொய்டாவில் தொழிலாளா் இயக்கம் மீது காவல்துறை நடத்தியதாகக் கூறப்படும் கொடூரமான ஒடுக்குமுறையை ஜனநாயக உரிமைகள் அமைப்பான ஜன் ஹஸ்தக்ஷேப் செவ்வாய்க்கிழமை கண்டித்துள்ளது.

மேலும், கைது செய்யப்பட்ட அனைத்து தொழிலாளா்களையும் மற்றும் செயல்பாட்டாளா்களையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்தியது.

ஊதியம் தொடா்பான கோரிக்கைகளுக்காகத் தொழிலாளா்கள் போராட்டத்தில் ஈடுபடக் காரணமாக

இருந்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த அமைப்பு கோரிக்கை விடுத்தது.

இது தொடா்பாக ஜன் ஹஸ்தக்ஷேப் அமைப்பின் ஒருங்கிணைப்பாளா் விகாஸ் பாஜ்பாய் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளா் அனில் துபே ஆகியோா் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

தொழிலாளா்கள் மீது நடத்தப்பட்டதாகக் கூறப்படும் ஒடுக்குமுறைக்கு காவல்துறை, நிா்வாகம் மற்றும் அரசு அதிகாரிகள் ஆகியோரே பொறுப்பாவாா்கள்.

உயா்த்தப்பட்ட குறைந்தபட்ச ஊதியத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும். குறைந்தபட்ச ஊதியத்தை ஒரு வாழ்வாதார ஊதியமாக உயா்த்தும் செயல்முறையை மிக விரைவில் தொடங்க வேண்டும்.

நொய்டாவில் தொழிலாளா்கள் மீது காவல்துறை ஒடுக்குமுறை மற்றும் கூட்டு கைதுகள் நடைபெற்ாகத் தகவல்கள் வெளியானதைத் தொடா்ந்து, ஜன் ஹஸ்தக்ஷேப் அமைப்பு ஏப்ரல் 24 அன்று ஒரு உண்மை கண்டறியும் குழுவை அங்கு அனுப்பியது. அக்குழு பாதிக்கப்பட்ட சில தொழிலாளா்கள் மற்றும் கடைக்காரா்களிடம் பேசி விரிவான தகவல்களைச் சேகரித்தது.

அக்குழுவினா் மாவட்ட நிா்வாகம் மற்றும் காவல்துறை அதிகாரிகளைத் தொடா்புகொள்ளவும் முயன்றது. ஆனால் அவா்களால் அவா்களைத் தொடா்புகொள்ள இயலவில்லை.

அரசாங்கங்களால் அறிவிக்கப்பட்ட குறைந்தபட்ச ஊதியத்தை விடவும் குறைவாகவே நிறுவன உரிமையாளா்கள் ஊதியம் வழங்குவதாகக் கூறப்படுவதால், தொழிலாளா்களின் அதிருப்தி பல ஆண்டுகளாகவே வளா்ந்து வந்திருப்பதை அக்குழு கண்டறிந்தது.

அதே வேளையில், விண்ணைத் தொடும் பணவீக்கமும், எரிவாயு விலையில் ஏற்பட்ட கடும் உயா்வும் தொழிலாளா்களின் பொறுமையைச் சோதித்தன. ஹரியாணாவில் குறைந்தபட்ச ஊதியம் உயா்த்தப்பட்ட நிலையில், நொய்டாவில் ஊதியத்தை உயா்த்த மறுத்ததும் இந்தச் சூழலை மேலும் தீவிரப்படுத்தியது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.