உத்தரப் பிரதேசத்தில் குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்தக் கோரி தொழிலாளர்கள் நடத்திய போராட்டம் கலவரமாக மாறிய நிலையில் ஊதிய உயர்வுக்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
உத்தரப் பிரதேசத்தின் நொய்டா - காசியாபாத் பகுதியின் பல்வேறு தொழிற்பிரிவுகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள ஊதிய திருத்தக் கோரிக்கைகளுக்காகப் போராட்டம் நடத்தினர்.
1,000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பெரும் குழுக்களாகக் கூடி பல இடங்களில் முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்தப் போராட்டம் நொய்டாவின் ஃபேஸ்-2 மற்றும் செக்டர் 60 போன்ற பகுதிகளில் நேற்று கலவரமாக மாறியது. சில பகுதிகளில் மிகவும் மோசமடைந்து கல் எறிதல், பொதுச் சொத்துக்களைச் சேதப்படுத்துதல் மற்றும் தீவைப்பு போன்ற சம்பவங்கள் நடைபெற்றன.
இதில் ஒரு வாகனம் எரிக்கப்பட்டது. பல வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன. இதனால், அங்கு பெரும் பதற்றம் நிலவியது. இதனால், அந்தப் பகுதி முழுவதும் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து, ”ஊதிய உயர்வு வழங்க உயர்நிலை அதிகாரக் குழு முடிவு செய்துள்ளது. இந்த முடிவுக்கு உத்தரப் பிரதேச முதல்வர் நேற்று இரவு ஒப்புதல் அளித்துள்ளார்" என கௌதம் புத்த நகர் மாவட்ட ஆட்சியர் மேதா ரூபம் தெரிவித்தார்.
இதன்படி, கௌதம் புத்த நகர் மற்றும் காசியாபாத் பகுதியில் உள்ள திறனற்ற தொழிலாளர்கள் ஊதியம் முன்பு ரூ.11313 ஆக இருந்ததை ரூ.13,690 ஆகவும், ஓரளவு திறனுள்ள தொழிலாளர்கள் ஊதியம் ரூ.15,059 ஆகவும், திறனுள்ள தொழிலாளர்கள் ஊதியம் ரூ.16,868 ஆகவும் உயர்த்திப் பெறுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மற்ற மாநகராட்சிப் பகுதிகளில் திருத்தப்பட்ட மாத ஊதியமானது திறனற்ற தொழிலாளர்களுக்கு ரூ.13,006, ஓரளவு திறனுள்ள தொழிலாளர்களுக்கு ரூ.14,306 மற்றும் திறனுள்ள தொழிலாளர்களுக்கு ரூ.16,025 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மீதமுள்ள மாவட்டங்களில், திறனற்ற தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.12,356, ஓரளவு திறனுள்ள தொழிலாளர்களுக்கு ரூ.13,591 மற்றும் திறனுள்ள தொழிலாளர்களுக்கு ரூ.15,224 ஊதியமாக வழங்கப்படவுள்ளது.
Summary
UP government hikes minimum wages across categories after Noida unrest
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நொய்டாவில் கைதான தொழிலாளா்களை விடுவிக்க உரிமைகள் அமைப்பு கோரிக்கை

குறைந்தபட்ச ஊதியம் ரூ. 69,000 வழங்க வேண்டும்: 8-வது ஊதியக் குழுவுக்கு ஊழியர் சங்கங்கள் கோரிக்கை!

நொய்டா வன்முறை: தொழிலாளா்களுக்கு குறைந்தபட்ச ஊதிய உயா்வை அறிவித்தது உ.பி. அரசு
ஊதிய உயர்வு போதவில்லை; உ.பி.யில் தொடரும் போராட்டம்!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

