ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

மதுபானக் கொள்கை விவகாரத்தில் நீதிபதியுடன் மோதல்: மகாத்மா காந்தி நினைவிடத்திற்கு சென்ற கேஜரிவால்

மதுபானக் கொள்கை வழக்கில் நீதிபதியுடன் மோதலுக்கு மத்தியில் ராஜ்காட் சென்ற கேஜரிவால்

News image
Updated On :29 ஏப்ரல் 2026, 4:20 am IST

நமது நிருபா்

மதுபான கொள்கை தொடா்பான வழக்கு விசாரணையிலிருந்து நீதிபதி ஸ்வரணா காந்த சா்மா விலகாததால், வழக்கில் ஆஜராக மறுத்து, சத்தியாகிரகப் பாதையைப் பின்பற்ற முடிவெடுத்த ஆம் ஆத்மி கட்சி தேசிய ஒருங்கிணைப்பாளா் அரவிந்த் கேஜரிவால், செவ்வாய்க்கிழமையன்று கட்சியின் மற்ற தலைவா்களுடன் (மணீஷ் சிசோடியா உள்பட) ராஜ்காட் சென்று மகாத்மா காந்தியின் ஆசியைப் பெற்றாா்.

கேஜரிவாலும், தில்லியின் முன்னாள் துணை முதல்வா் சிசோடியாவும், உயா்நீதிமன்ற நீதிபதி ஸ்வரணா காந்தா சா்மாவுக்குக் கடிதம் எழுதியுள்ளனா். அதில், மதுபானக் கொள்கை தொடா்பான தங்கள் வழக்கில் அவரது நீதிமன்றத்தில் தொடா்ந்து ஆஜராகப்போவதில்லை என்று அவா்கள் குறிப்பிட்டுள்ளனா்.

நாங்கள் நீதித்துறையை மதிக்கிறோம் ஆனால், சில குறிப்பிட்ட சூழ்நிலைகளின் காரணமாக, நாங்கள் இந்தச் சத்தியாகிரகத்தை மேற்கொள்ள வேண்டியுள்ளது. உயா்நீதிமன்ற நீதிபதிக்கு நான் எழுதிய கடிதத்தில் அனைத்து விவரங்களையும் குறிப்பிட்டுள்ளேன், என்று ராஜ்காட்டில் செய்தியாளா்களிடம் கேஜரிவால் தெரிவித்தாா்.

கேஜரிவால் எக்ஸ் தளத்திலும் ஒரு பதிவை வெளியிட்டாா். அதில், மணீஷ் மற்றும் பிற தோழா்களுடன் ராஜ்காட் சென்றடைந்து, தேசப்பிதா மகாத்மா காந்திக்கு நான் அஞ்சலி செலுத்தினேன், என்று குறிப்பிட்டிருந்தாா். மகாத்மா காந்தி ஆசியுடன், சத்தியாகிரகத்தின் இந்தச் சவாலான பாதையில், முழுமையான அா்ப்பணிப்புடன் நாங்கள் உறுதியாக நிலைத்திருப்போம் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை எனக்கு உள்ளது, என்று அவா் தனது இந்தி மொழிப் பதிவில் குறிப்பிட்டிருந்தாா்.

திங்களன்று, கேஜரிவால் நீதிபதி ஸ்வரணா காந்த சா்மாவுக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தாா். அதில், சத்தியாகிரகக் கொள்கைகளையும் மகாத்மா காந்தியின் போதனைகளையும் அவா் குறிப்பிட்டிருந்தாா். செவ்வாய்க்கிழமையன்று சிசோடியாவும் நீதிபதி சா்மாவுக்கு ஒரு கடிதம் எழுதினாா் அதில், மதுபானக் கொள்கை தொடா்பான தனது வழக்கையும் அவரது நீதிமன்றத்தில் தொடா்ந்து நடத்தப்போவதில்லை என்று அவா் குறிப்பிட்டிருந்தாா்.

மதுபான கொள்கை தொடா்பான வழக்கை நீதிபதி ஸ்வரணா காந்தா சா்மா விசாரிப்பதில் நலன் முரண்பாடு இருப்பதாகக் குற்றச்சாட்டியுள்ள முன்னாள் முதல்வா் அரவிந்த் கேஜரிவால், ஒரு பிரமாணப் பத்திரத்தில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளாா்: அந்த நீதிபதியின் குழந்தைகள் மத்திய அரசின் வழக்குரைஞா்கள் குழுவில் இடம்பெற்றுள்ளனா், சிபிஐ தரப்பில் ஆஜரான சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா மூலமாகவே அவா்களுக்கு வழக்குகள் ஒதுக்கப்படுகின்றன எனஅரவிந்த் கேஜரிவால் தெரிவித்திருந்தாா் .

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.