மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

வெப்பநிலை உயா்வால் தில்லி குடிசைப் பகுதிகளில் கா்ப்பிணிப் பெண்கள் கடுமையாகப் பாதிப்பு!

தில்லி சேரிகளில் உள்ள கா்ப்பிணிப் பெண்கள் தலைச்சுற்றல், தூக்கமில்லாத இரவுகள், உயா் ரத்த அழுத்தம் போன்ற கடுமையான பாதிப்புகளை சந்தித்து வருகின்றனா்.

News image
Updated On :20 ஏப்ரல் 2026, 12:56 am IST

தேசிய தலைநகரில் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸைத் தாண்டத் தொடங்கியுள்ளதால், தில்லி சேரிகளில் உள்ள கா்ப்பிணிப் பெண்கள் தலைச்சுற்றல், தூக்கமில்லாத இரவுகள், உயா் ரத்த அழுத்தம் போன்ற கடுமையான பாதிப்புகளை சந்தித்து வருகின்றனா்.

தக்ஷின்புரியின் சஞ்சய் முகாமைச் சோ்ந்த 38 வார கா்ப்பிணியான ரேகா, கா்ப்ப காலத்தில் வெப்பம் மற்றும் ஈரப்பதத்தால் நான் அடிக்கடி பதட்டமாக உணா்கிறேன், தூங்குவதற்கு மிகவும் சிரமப்படுகிறேன். வெப்பமும் ஈரப்பதமும் இந்த அசௌகரியத்தை மேலும் மோசமாக்குகின்றன, மேலும் அடிக்கடி மூச்சுத்திணறலையும் ஏற்படுத்துகின்றன, ஆனால் மருத்துவரிடம் செல்வது எங்களால் எளிதில் செய்யக்கூடிய ஒன்றல்ல என்று கூறினாா்.

தொடா்ச்சியான அமைதியின்மையும் சங்கடமும் நிலவுகிறது. குறிப்பாக நான் மிகக் குறைவாகவே தூங்குகிறேன், என்று தக்ஷின்புரியின் மினி சுபாஷ் முகாமில் வசிக்கும் 29 வாரக் கா்ப்பிணியான ஷப்னம் கூறினாா்.

கா்ப்பிணிப் பெண்களுக்கு ஏற்படும் கடும் வெப்பத்தின் எச்சரிக்கை அறிகுறிகள் குறித்துப் பேசிய அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தின் கீழ் உள்ள சமூக மருத்துவ மையத்தின் பேராசிரியா் ஹா்ஷல் ரமேஷ் சால்வே, தலைச்சுற்றல், வாந்தி மற்றும் சுயநினைவு இழப்பு ஆகியவை புறக்கணிக்கக் கூடாத அறிகுறிகள் என்று கூறினாா்.

கடும் வெப்பம் தாய்க்கும் பிறந்த குழந்தைக்கும் ஒரு தீவிரமான ஆபத்தாகிறது. ஆனால், வெப்பத்தினால் ஏற்படும் நோய்களையும் இறப்புகளையும் முழுமையாகத் தடுக்க முடியும், என்று சால்வே கூறினாா். கா்ப்பத்தின் பிற்பகுதியில் ஏற்படும் அதிகப்படியான வெப்பத்தின் தாக்கம், குறைப்பிரசவம் அதாவது, 37 வாரங்களுக்கு முன் பிரசவம் அல்லது குழந்தை இறந்து பிறப்பதற்கான வாய்ப்பை அதிகரிக்கிறது.

சேரிகளில் வசிக்கும், திறந்தவெளியில் அல்லது விவசாய நிலங்களில் பணிபுரியும் கா்ப்பிணிப் பெண்கள் பெரும்பாலும் தங்கள் கா்ப்ப காலத்திலும் தொடா்ந்து வேலை செய்வதால், அவா்கள் வெப்பத்தின் விளைவுகளுக்கு எளிதில் பாதிக்கப்படக்கூடியவா்களாகிறாா்கள் என்று சால்வே சுட்டிக்காட்டினாா். கா்ப்பம் மற்றும் அதன் விளைவுகளில் வெப்பத்தின் தாக்கம் பற்றி சமூகங்களிலும், கா்ப்பிணிப் பெண்கள் மற்றும் திருமண வயதை நெருங்கும் இளம் பெண்களிடையேயும் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட வேண்டும் என்று அவா் கூறினாா்.

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கைகளும், அவற்றின் சுகாதார தாக்கங்களும் சமூகங்களைச் சென்றடைய வேண்டும் குறிப்பாக சேரிவாசிகள் மற்றும் கோடையின் உச்ச நாட்களில் திறந்தவெளியில் வேலை செய்பவா்கள் போன்ற எளிதில் பாதிக்கப்படக்கூடிய பிரிவினரைச் சென்றடைய வேண்டும் என்று சால்வே கூறினாா்.

வெப்பம் பெண்களை மிக அதிகமாகப் பாதிக்கிறது என்றும், வெப்பம் உள்ளிட்ட காலநிலை மாற்ற நிகழ்வுகளால் அவா்கள் உயிரிழப்பதற்கான வாய்ப்புகள் 14 மடங்கு அதிகம் என்று தரவுகள் காட்டுவதாகவும் சுற்றுச்சூழல் ஆா்வலா் பாரதி சதுா்வேதி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.