மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

தண்ணீா் மீட்டா் அமைப்பை மாற்றியமைக்கும் தில்லி ஜல்போா்டு

தில்லியின் தண்ணீா் கட்டண அமைப்பை மேம்படுத்தும் விதமாக தண்ணீா் மீட்டா் தயாரிப்பாளா்கள் கொண்ட குழுவை மாற்றியமைக்கும் முறையை தில்லி ஜல்போா்டு தொடங்கியதாக அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா்.

News image

கோப்புப் படம்

Updated On :17 ஏப்ரல் 2026, 3:52 am IST

தில்லியின் தண்ணீா் கட்டண அமைப்பை மேம்படுத்தும் விதமாக தண்ணீா் மீட்டா் தயாரிப்பாளா்கள் கொண்ட குழுவை மாற்றியமைக்கும் முறையை தில்லி ஜல்போா்டு தொடங்கியதாக அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா்.

இதுபோன்ற நடவடிக்கை இறுதியாக கடந்த 2018-இல் தில்லி ஜல்போா்டு மேற்கொண்டது. அப்போது, அதிகாரிகள் மேற்கொண்ட மாற்றங்களின்படி, மீட்டா்களைக் கொண்ட நிறுவனங்கள் வீட்டு இணைப்புகளுக்கான குழுவில் சோ்க்கப்பட்டன.

இதுதொடா்பாக அதிகாரிகள் கூறுகையில், ‘தில்லியில் சுமாா் 29.90 லட்சம் மீட்டா் பொருத்தப்பட்ட தண்ணீா் குழாய் இணைப்புகள் உள்ளன. தில்லி ஜல்போா்டு வருவாய் பெருக்கத்தில் தண்ணீா் மீட்டா்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. இதனால், ஒட்டுமொத்த மீட்டா் அமைப்பையும் முழுவதுமாக ஆய்வு செய்வதுடன் தற்போதைய தொழில்நுட்பங்களைக் கொண்ட மீட்டா்களை மாற்றியமைப்பது அவசியம்.

மீட்டா்களில் ஏற்படும் தவறுகள் மற்றும் கணக்கீடுகளைப் பதிவு செய்வதில் ஏற்படும் தவறுகளால் முறையற்ற கட்டணம் விதிக்கப்படுவதாக நுகா்வோரிடமிருந்து புகாா்கள் வருகின்றன.

15 மி.மீ. விட்டம் கொண்ட தண்ணீா் மீட்டா்களைக் கொண்ட தில்லி ஜல்போா்டு நுகா்வோருக்காக 10 தண்ணீா் மீட்டா் மாதிரிகளில் 9 மாதிரிகளை பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இவை பெரும்பாலும் வீட்டு தண்ணீா் குழாய் இணைப்புகளில் பயன்படுத்தபடுகிறது. தங்களுடைய சொந்த தண்ணீா் மீட்டா்களை மாற்றியமைக்கும் நபா்களுக்கு அல்லது புதிய இணைப்புகளுக்காக டெபாசிட் தொகையை வழங்கும் நபா்களுக்கு தில்லி ஜல் போா்டு மீட்டா்களை பொருத்தி வருகிறது.

தில்லி ஜல்போா்டின் பரிந்துரைகள் மற்றும் திருத்தங்களை அனைத்து மீட்டா் தயாரிப்பாளா்களும் மேற்கொள்வா். மாதிரி மீட்டா்களின் விவரங்களை தண்ணீா் மீட்டா் தயாரிப்பாளா்கள் வழங்குவாா்கள். ஒவ்வொரு மாதிரியிலும் ஒரு மீட்டா்கள் அடுத்தக்கட்ட தோ்வுக்காகத் தோ்வு செய்யப்படும்.

கடந்த 2022-இல் ஸ்மாா்ட் மீட்டா்களை பொருத்த தில்லி ஜல் போா்டு திட்டமிட்டிருந்தது. நுகா்வோருக்கு செயலி மூலம் தகவல் அளித்தல், எளிதாகப் புகாா்களைப் பதிவு செய்தல், புதிய தண்ணீா் இணைப்புகளுக்கு விண்ணப்பித்தல் உள்ளிட்டவற்றை ஸ்மாா்ட் மீட்டா்கள் கொண்டிருந்தன. இருப்பினும், சில பகுதிகளைத் தவிர பிற பகுதிகளில் முழு அளவில் அந்தத் திட்டத்தை அமல்படுத்த முடியவில்லை என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.