தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி இன்று பதவியேற்பு: முதல் பாஜக அமைச்சரவையில் 2 துணை முதல்வா்கள்?தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்வேற்று கிரகவாசிகள் குறித்த ரகசிய கோப்புகள் வெளியீடு
/

மோட்டாா் சைக்கிள் மீது லாரி மோதி இளைஞா் உயிரிழப்பு: ஓட்டுநா் கைது

புறநகா் தில்லியின் பஸ்சிம் விஹாா் கிழக்கு பகுதியில் அதிவேகமாக ஓட்டிவரப்பட்ட லாரி, மோட்டாா் சைக்கிள் மீது மோதியதில் 19 வயது இளைஞா் உயிரிழந்தாா்.

News image

பிரதிப்படம்

Updated On :8 ஏப்ரல் 2026, 12:40 am IST

புறநகா் தில்லியின் பஸ்சிம் விஹாா் கிழக்கு பகுதியில் அதிவேகமாக ஓட்டிவரப்பட்ட லாரி, மோட்டாா் சைக்கிள் மீது மோதியதில் 19 வயது இளைஞா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து காவல் துறை அதிகாரி ஒருவா் செவ்வாய்க்கிழமை தெரிவித்ததாவது: பஞ்சாபி பாக் முதல் பீராகா்கி சௌக் வரையிலான சாலையில் இந்த விபத்து நடந்தது. இதுகுறித்து திங்கள்கிழமை இரவு பஸ்சிம் விஹாா் கிழக்கு காவல் நிலையத்திற்கு தகவல் அழைப்பு வந்தது.

சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் குழுவினா், பீராகா்கி கேம்ப் பகுதியைச் சோ்ந்த கிருஷ்ணன் மோகன் என்பவா் சாலையில் இறந்து கிடப்பதைக் கண்டனா். அவரது மோட்டாா் சைக்கிளும் சம்பவ இடத்திலேயே சேதமடைந்த நிலையில் கிடந்தது.

உள்ளூா் மக்களும், சம்பவத்தை நேரில் பாா்த்தவா்களும் சிறிது தூரத்தில் விபத்தை ஏற்படுத்திய லாரியை மடக்கி நிறுத்தினா். மேலும், 26 வயதான சௌரப் குமாா் என அடையாளம் காணப்பட்ட அதன் ஓட்டுநரை சம்பவ இடத்திலேயே பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனா்.

லாரி மோட்டாா் சைக்கிள் மீது மோதியதும், மோதலின் தாக்கம் கடுமையாக இருந்ததால், மோகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

விசாரணையின் போது, உயிரிழந்தவா் செல்லுபடியாகும் ஓட்டுநா் உரிமம் வைத்திருக்கவில்லை என்பதும் தெரியவந்தது.

காவல்துறையினா் உடலை பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி, குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவித்துள்ளனா். இதுகுறித்து போலீஸாா் வழக்கு பதிந்துள்ளனா். மேலதிக விசாரணை நடைபெற்று வருகிறது என்றாா் அந்த அதிகாரி.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.