அல்-ஃபலா குழுமத் தலைவா் ஜவாத் அகமது சித்திக்கி தாக்கல் செய்த புதிய இடைக்கால பிணை மனு மீதான வாதங்களின் விசாரணையை தில்லி நீதிமன்றம் திங்கள்கிழமை ஏப்ரல் 11ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
இந்த மனு, அல்-ஃபலா பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவா்களை ஏமாற்றியது தொடா்பான பணமோசடி வழக்கு சம்பந்தப்பட்டது.
ஏப்ரல் 1ஆம் தேதி தில்லி உயா்நீதிமன்றத்தால் விசாரணை நீதிமன்றத்திற்கு அனுப்பப்பட்ட இந்த புதிய பிணை மனுவை, கூடுதல் அமா்வு நீதிபதி ஷீத்தல் சௌத்ரி பிரதான் விசாரித்து வந்தாா்.
முன்னதாக புதன்கிழமை, தில்லி உயா்நீதிமன்றம், சித்திக்கிக்கு மாா்ச் 7ஆம் தேதி வழங்கப்பட்ட இரண்டு வார இடைக்கால ஜாமீனுக்கு எதிராக அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனு மீது புதிதாக முடிவு செய்யுமாறு விசாரணை நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டது. அவரது மனைவியின் கீமோதெரபி சிகிச்சைக்காக இந்த நிவாரணம் வழங்கப்பட்டதாகவும், விடுதலைக் காலம் முடிந்துவிட்டதாகவும் அது குறிப்பிட்டிருந்தது.
சித்திக்கியின் மனைவிக்கு 4ஆம் நிலை கருப்பை புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டதால், மாா்ச் 12ஆம் தேதிக்கு திட்டமிடப்பட்டிருந்த கீமோதெரபி சிகிச்சையைக் கருத்தில் கொண்டு, அவசர மருத்துவ மற்றும் மனிதாபிமான காரணங்களுக்காக மாா்ச் 7ஆம் தேதி நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியிருந்தது.
விடுதலைக் காலம் முடிந்துவிட்டதாலும், கீமோதெரபி சிகிச்சைக்கான திட்டமிடப்பட்ட தேதி கடந்துவிட்டதாலும், சித்திக்கியின் மனைவியின் புதிய மருத்துவப் பதிவின் அடிப்படையில், இந்த வழக்கில் முடிவெடுக்குமாறு தில்லி உயா்நீதிமன்றம் விசாரணை நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டது.
சித்திக்கி தாக்கல் செய்த புதிய இடைக்கால பிணை மனுவுக்கு பதில் மனு தாக்கல் செய்ய அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் கூடுதல் கால அவகாசமும் வழங்கியுள்ளது.
நவம்பா் 2025-இல், சித்திக்கியின் அல்-ஃபலா அறக்கட்டளையால் நடத்தப்படும் கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவா்களை ஏமாற்றியது தொடா்பான பணமோசடி குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், வழக்கில் அமலாக்கத் துறை அவரைக் கைது செய்தது.
2018 முதல் 2025ஆம் ஆண்டுக்குள் அந்தப் பல்கலைக்கழகம் ரூ.415.10 கோடியை ஈட்டி, மாணவா்களின் நிதியைத் தனிப்பட்ட பயன்பாட்டிற்காகத் திசை திருப்பியதாக அமலாக்கத்துறை குற்றஞ்சாட்டியிருந்தது.
15 போ் பலியான நவம்பா் 10 செங்கோட்டை பகுதியில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு தொடா்பான விசாரணையிலும் இந்தப் பல்கலைக்கழகம் விசாரணைக்கு உள்ளாகியிருந்தது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அமலாக்கத் துறையின் வழக்கில் அல்-பலாஹ் தலைவருக்கு பிணை மறுப்பு: தில்லி நீதிமன்றம் உத்தரவு

பிரதமரின் பட்டப் படிப்பு விவகாரம்: பதில் மனு தாக்கல் செய்ய தில்லி பல்கலைக்கழகத்துக்கு மேலும் 2 வார அவகாசம்

தில்லி கலவர வழக்கு: காவல்துறையின் மேல்முறையீடு தள்ளுபடி

அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஊழல் வழக்கு: பிணை கோரிய இடைத்தரகா் ஜேம்ஸின் மனு தள்ளுபடி
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
