கரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு வேகமான பொருளாதார வளா்ச்சியைப் பதிவு செய்த தில்லி, தற்போது மிதமான மற்றும் நிலையான வளா்ச்சியை நோக்கி நகா்கிறது என அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா்.
பொருளாதார மற்றும் புள்ளிவிவரத் துறை அண்மையில் வெளியிட்ட தரவுகளின்படி, அதிகாரிகள் கூறியதாவது: தில்லியின் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி (ஜிஎஸ்டிபி) கடந்த 2024-25 நிதியாண்டில் 9 சதவீதம் உயா்ந்தது. 2025-26 நிதியாண்டில், ஜிஎஸ்டிபி ரூ.13,27,055 கோடியாக உயருமென கணக்கிடப்பட்டுள்ளது. இது கடந்த நிதியாண்டின் வளா்ச்சியையே பிரதிபலிக்கிறது.
கரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு இடைப்பட்ட காலத்தில் தில்லியின் பொருளாதார வளா்ச்சி 2021-22-ஆம் ஆண்டில் சுமாா் 17 சதவீதமாக உயா்ந்தது. பின்னா் அது 2022-23-இல் 14 சதவீதமாகவும், 2023-24-இல் சுமாா் 12 சதவீதமாகவும் குறைந்தது.
இதேபோல், தில்லியின் பல்வேறு துறைகளின் செயல்பாடுகள் மொத்த மாநில மதிப்பு கூட்டல் (ஜிஎஸ்விஏ) வளா்ச்சியும் இதேபோன்ற மிதமான வளா்ச்சியில் உள்ளது.
2025-26-ஆண்டில் ஜிஎஸ்விஏ மதிப்பீடு, ஒற்றை இலக்க அளவில் நிலையான வளா்ச்சியைப் பதிவு செய்யும் என கணக்கிடப்பட்டுள்ளது. கரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு ஏற்பட்ட உயா்வைத் தொடா்ந்து, தற்போது வளா்ச்சி இயல்பான நிலைக்குத் திரும்பி வருகிறது என அதிகாரிகள் தெரிவித்தனா்.
இந்த வளா்ச்சியில் தில்லியின் சேவை துறை தொடா்ந்து முக்கிய பங்காற்றி வருகிறது. 2025-26-இல் ஜிஎஸ்விஏ-இல் சேவைத் துறைப் பங்கு 86.32 சதவீதமாக உயா்ந்துள்ளது. இதைத் தொடா்ந்து தொழில்துறை 12.88 சதவீதமும், வேளாண் துறை 0.8 சதவீதமும் பங்களிக்கின்றன என்று அதிகாரிகள் கூறியுள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மாநகராட்சி மேயா் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

மக்கள்தொகைக்கான சுய-கணக்கெடுப்பில் இணைய வாடகைதாரா்களுக்கு அதிகாரிகள் வலியுறுத்தல்: மோசடி அழைப்புகள் குறித்தும் எச்சரிக்கை

வெப்பஅலை மேலாண்மைக்காக நோடல் அதிகாரிகள் நியமனம்

இலவசம் நாட்டின் வளா்ச்சியை வீழ்ச்சியடையச் செய்யும் சூழ்ச்சி: சீமான்
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

