உடல் பருமனால் பல்வேறு நோய்கள் ஏற்படும் நிலையில் உடல் எடையைக் குறைக்க முயற்சிகள் எடுக்க வேண்டுமென நிபுணர்கள் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர்.
உடல் எடையைக் கட்டுக்குள் வைக்க உணவுப்பழக்கவழக்கத்தில் மாற்றம், உடற்பயிற்சி, மன அழுத்தத்தை நிர்வகிப்பது என பல்வேறு அறிவுறுத்தல்களையும் வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில் உடல் எடையைக் குறைக்க நிபுணர்கள் கூறும் பொதுவான 10 அறிவுறுத்தல்கள் இதோ...
1. முதலில் உணவுப்பழக்கவழக்கத்தில் புரதம் நிறைந்த உணவுகளுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். உணவில் முட்டை, கோழி, மீன், பருப்பு, டோஃபு ஆகியவற்றைச் சேர்த்துக் கொள்ளுங்கள். இதனால் வயிறு நிரம்பியது போன்று இருக்கும். கொழுப்புகள் அதிகம் சேராது.
2. அதேபோல காய்கறிகள், பழங்கள், முழு தானியங்கள் என நார்ச்சத்து அதிகமுள்ள உணவுகளைச் சாப்பிட வேண்டும், மாறாக கார்போஹைடிரேட் உணவைக் குறைத்துக்கொள்ள வேண்டும்.
3. நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். டீ / காபி, சர்க்கரை பானங்களைத் தவிர்த்து இயற்கையான பானங்களை எடுத்துக்கொள்ளலாம்.
4. நீங்கள் நாள்தோறும் எவ்வளவு உணவு எடுத்துக்கொள்கிறீர்கள், அது எவ்வளவு கலோரி என்பதை கணக்கிடுவது உடல் எடையை நிர்வகிக்க உதவும்.
5. பதப்படுத்தப்பட்ட உணவுகள், சர்க்கரை நிறைந்த உணவுகள், வறுத்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.
6. உணவை நன்றாக மென்று பொறுமையாகச் சாப்பிட வேண்டும். இதுவும் உடல் எடையை நிர்வகிக்கும். அதுபோல சரியான நேரத்திற்கு சாப்பிட வேண்டும். இரவு 7 மணிக்கு முன்னதாக இரவு உணவை முடித்துக்கொள்வது நல்லது.
7. உடல் எடையைக் குறைக்க உணவுப்பழக்க மாற்றத்துடன் உடற்பயிற்சியும் அவசியம். சாதாரண நடைப்பயிற்சி முதல் 'ஹிட்' எனும் வலிமைக்கான பயிற்சிகள் வரை செய்யலாம். உங்கள் உடல்நிலைக்கு ஏற்றவாறு உடற்பயிற்சியில் ஈடுபடுங்கள்.
8. நாள் ஒன்றுக்கு 7 முதல் 8 மணி நேரம் ஆழ்ந்த தூக்கம் அவசியம்.
9. மன அழுத்தமும் உடல் எடையில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. அதனால் முடிந்தவரை மன நலனில் கவனம் செலுத்தி மன அழுத்தமின்றி இருக்க முயற்சி.செய்யுங்கள். மன அழுத்தத்தைக் குறைக்க தேவைப்படின் நிபுணரை அணுகுவது நல்லது.
10. இறுதியாக உடல் எடை குறைவது என்பது ஒருநாளில் நடப்பது அல்ல, எனவே, இந்த பழக்கவழக்கங்களை ஓரிரு ஆண்டுகளுக்கு தொடர்ந்து கடைப்பிடிப்பதன் மூலம் உடல் எடை கணிசமாகக் குறையும். எனவே அதுவரை பொறுமை காப்பது நல்லது.
Summary
Follow these 10 tips to weight loss and prevent obesity
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

30+ ஆகிவிட்டதா? பெண்கள் கட்டாயம் செய்துகொள்ள வேண்டிய பரிசோதனைகள்!
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: அனைத்து நோய்களுக்கும் சிறந்த மருந்து...

40 வயது நெருங்கிவிட்டதா? கண்டிப்பாக செய்ய வேண்டியவை..!

உடல் எடையைக் குறைக்க உதவும் சாலட்! எப்படி செய்வது?
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


