காலையில் எழுந்தவுடன் உடல் ஆரோக்கியத்திற்காக சில பழக்கவழக்கங்களைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
காலையில் எழுந்தவுடன் ஒரு காபி அல்லது டீயைக் குடித்துவிட்டு அன்றாட வேலைகளைத் தொடங்குவதுதான் பலருக்கும் வழக்கமாக இருக்கிறது.

IANS
ஆனால், உடல்நிலையைக் கருத்தில்கொண்டு ஆரோக்கியமான உடல் மற்றும் மன நலத்திற்கு நாம் காலையில் எழுந்தவுடன் சில விஷயங்களை கண்டிப்பாகச் செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
அவ்வாறு செய்யும்போது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்துடன் இப்போது பலருக்கும் பிரச்னையாக உள்ள தூக்கக் கோளாறுகளை சரிசெய்யும் என்று ஆய்வுகளும் கூறுகின்றன.

ENS
சூரிய ஒளி தேவை
காலையில் எழுந்தவுடன் சூரிய ஒளியை உடல் பெற வேண்டும். காலையில் உடலில் சூரிய ஒளி படும்போது உடலில் இயங்கும் கிர்காடியன் ரிதம் சக்திவாய்ந்ததாக இருக்கும். உங்களுடைய உடல் சிறிதளவு சூரிய ஒளியை உட்கிரகித்தாலே இரவில் உங்களுடைய தூக்கத்தை மேம்படுத்தும். உங்களுடைய மூளையின் செயல்பாட்டையும் ஊக்குவிக்கும். ரிலாக்ஸாக உணர வைக்கும்.
காலை 10 மணிக்கு முன்னதாக 30 நிமிடங்கள் சூரிய ஒளியில் இருப்பது தூக்கத்தை மேம்படுத்தும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.

ANI
போன் வேண்டாம்
இரவில் தூக்கத்திற்கு முன்பும் சரி, காலையில் எழுந்தவுடனும் சரி பெரும்பாலும் அனைவரின் கையிலும் போன் இருக்கும். வேலை சார்ந்து அல்லது பொழுதுபோக்கு சார்ந்து நீங்கள் போனை பயன்படுத்தலாம். ஆனால், காலை எழுந்ததும் குறைந்தது 45 நிமிடங்களுக்கு ஸ்மார்ட்போனைப் பயன்படுத்த வேண்டாம் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். ஏனெனில் ஸ்மார்ட்போனில் இருந்து வரும் ஒளி, உடலில் மன அழுத்தத்திற்கான ஹார்மோனைத் தூண்டுகிறது.
நீங்கள் காலையில் செய்யும் ஒரு விஷயம் இரவில் உங்கள் தூக்கத்தைப் பாதிக்கும். அதேபோல இரவு தூங்கும்முன்பும் ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக போனை ஒதுக்கிவைத்துவிட அறிவுறுத்துகிறார்கள்.
காலை உடற்பயிற்சி
இப்போது உடல் இயக்கம் சரியாக இல்லாததால்தான் பல்வேறு உடல்நலப் பிரச்னைகள் ஏற்படுகின்றன. அதனால் காலையில் எழுந்தவுடன் சிறிது நேரம் நடப்பது, ஓடுவது என லேசான உடற்பயிற்சிகளைச் செய்வது மன அழுத்தத்தில் இருந்து விடுபட உதவுகிறது, ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது, இதனால் இரவில் நல்ல தூக்கம் கிடைக்கும்.

<P>HEALTHY-FOOD094704.JPG</P> - Center-Center-Chennai
காலை உணவு
காலை உணவைத் தவிர்ப்பது மிகவும் மோசமானது என்று அறிவுறுத்தும் மருத்துவர்கள், காலை உணவை சீக்கிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்கின்றனர். அதிலும் காலை உணவு முட்டை, தயிர், நட்ஸ் என புரதம் நிறைந்த உணவாக இருக்க வேண்டும், கார்போஹைடிரேட், நல்ல கொழுப்புகள் என மற்ற சத்துகளுடன் கூடிய சமச்சீரான உணவு வேண்டும். நள்ளிரவு சாப்பிடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்துகிறார்கள்.

ENS
காலை எழுவது
இரவில் தாமதமாகத் தூங்கினாலும் காலையில் ஒரே நேரத்தில் எழுவதை வழக்கமாகக் கொண்டிருக்க வேண்டும். காலையில் 6 மணிக்கு என்றால் தினமும் காலை 6 மணிக்கு எழுந்திருக்க வேண்டும். வார இறுதி நாள்கள், விடுமுறை நாள்களுக்கு வேண்டுமானால் நேரத்தை சற்று தளர்த்திக்கொள்ளலாம்.
Summary
Do these 5 things as soon as you wake up in the morning for better health
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

காலை, மாலையில் கால்நடைகளை மேய்ச்சலுக்கு அனுப்பலாம்: ஆட்சியா்

கோடை நோய்களுக்கு பாராசிட்டமால் கூடாது: பொது சுகாதாரத் துறை

30+ ஆகிவிட்டதா? பெண்கள் கட்டாயம் செய்துகொள்ள வேண்டிய பரிசோதனைகள்!

40 வயது நெருங்கிவிட்டதா? கண்டிப்பாக செய்ய வேண்டியவை..!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு



