டிரம்ப்புக்கு அதிர்ச்சி! அமெரிக்க செனட், பிரதிநிதிகள் சபையை கைப்பற்றியது ஜனநாயகக் கட்சி!!அமெரிக்க தேர்தலில் இந்திய வம்சாவளி விவேக் ராமசுவாமி தோல்வி!நான் போட்டியிட்டிருந்தால் இமாலய வெற்றி பெற்றிருப்போம்! டிரம்ப்டிரம்ப்பின் குடியரசு கட்சிக்கு அதிர்ச்சி: செனட் சபையைக் கைப்பற்றியது ஜனநாயக கட்சி!தங்கம் விலை தொடர்ந்து உயர்வு! இன்றைய (நவ. 4) நிலவரம்!ரூ. 100-க்கு 10 காய்கறிகள்: வெற்றி சிறப்பு காய்கறி தொகுப்புத் திட்டம்!இடைக்காலத் தேர்தல்: டிரம்ப்பின் குடியரசுக் கட்சிக்கு பெரும் பின்னடைவு!நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள்: இந்திய அணி டாஸ் வென்று பந்துவீச்சு!தேனி, கோவை மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புகுரூப் 4 தோ்வுக்கான விண்ணப்பம்: அவகாசம் நாளையுடன் நிறைவுமுரசு புயலால் இன்று 3 விரைவு ரயில்கள் ரத்து!அடுத்த பலப்பரீட்சை: இன்று முதல் ஒருநாள் கிரிக்கெட்

தீபாவளி வருகிறது! வீட்டுக்கு கேஸ் அடுப்பு வாங்குவதாக இருந்தால்...

தீபாவளி வருகிறதே என்று வீட்டுக்கு கேஸ் அடுப்பு வாங்குவதாக இருந்தால்..

எரிவாயு அடுப்பு

Published On :29 அக்டோபர் 2026, 10:00 am IST

சமையலறைக்கு இந்த ஒன்றை வாங்கிவிட்டால், பல ஆண்டுகளுக்கு அது பற்றி சிந்திக்கவே வேண்டாம் என்பது போல எதையாவது வாங்க வேண்டும், வரும் தீபாவளியை மறக்க முடியாததாக்க வேண்டும் என்று நினைத்தால் உங்கள் தேர்வு கேஸ் அடுப்பாக இருக்கலாம்.

ஒருவேளை, பல ஆண்டுகளுக்கு முன்பு வாங்கிய அடுப்பை நீங்கள் பயன்படுத்திக் கொண்டிருந்தால், நிச்சயம் அதனை மாற்றும் நேரம் வந்துவிட்டது என்பதை உணருங்கள்.

அடிக்கடி பர்னர் மாற்றுவது, எரிவாயு கசிவு போன்றவை நேரிட்டால் இதுதான் சரியான நேரம்.

தற்போது நான்கு பர்னர், மூன்று பர்னர், தானாகவே பற்றும் ஸ்டவ் என வகைக்கு ஒன்று விற்பனைக்கு வந்துவிட்டது.

பழைய ஸ்டீல் அடுப்புகளை என்னதான் துடைத்தாலும் அது பழையது என காட்டிக் கொடுத்துவிடும். ஆனால், தற்போது வரும் கண்ணாடி அடுப்புகள் ஒரு முறை துணியால் துடைத்தால் போதும் மின்னும்.

ஒரு சமையலறையில் இருக்கும் அடுப்பை வைத்தே அந்த வீட்டை பலரும் எடைபோட்டுவிடுவார்கள். எனவே, பழைய ஸ்டவ்களை மாற்றிவிட்டு தற்போது வரும் புதிய அடுப்புகளை உங்கள் வீட்டுக்கு தீபாவளிப் பரிசாக வாங்கிச் செல்லலாம்.

ஒன்று மட்டும் கவனிக்க...

மூன்று பர்னர்கள் கொண்ட அடுப்பை வாங்கும்போது, அதனதன் அருகே வால்வுகள் இருப்பது போல பார்த்து வாங்குவது நலம்.

மூன்று வால்வுகளும் ஒரே இடத்தில் இருந்தால் பயன்படுத்த சற்று சிக்கலாக இருக்கிறது. வேறொரு வால்வை திறந்துவிட்டு அதற்கு தொடர்பில்லாத பர்னரை பற்றவைக்கும் அபாயமும் உள்ளது. எனவே கவனமாகப் பார்த்து வாங்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.