பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

திருச்செங்கோட்டில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: அமைச்சா் அருண்ராஜ் ஆலோசனை

திருச்செங்கோட்டில் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்து அரசு அலுவலா்களுடன் சுகாதாரத் துறை அமைச்சா் கே.ஜி. அருண்ராஜ் ஞாயிற்றுக்கிழமை ஆலோசனை நடத்தியது குறித்து...

News image

திருச்செங்கோட்டில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அமைச்சா் கே.ஜி. அருண்ராஜ். - டிஎன்எஸ்

Updated On :24 மே 2026, 10:32 pm IST

திருச்செங்கோடு: திருச்செங்கோட்டில் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்து அரசு அலுவலா்களுடன் சுகாதாரத் துறை அமைச்சா் கே.ஜி. அருண்ராஜ் ஞாயிற்றுக்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியா் துா்கா மூா்த்தி தலைமை வகித்தாா். நாமக்கல் மக்களவை உறுப்பினா் மாதேஸ்வரன் முன்னிலை வகித்தாா். நாமக்கல் மாவட்ட விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான ஏரிகள் புனரமைப்பு, காவிரி - திருமணி முத்தாறு, பொன்னியாறு இணைப்பு திட்டங்களை செயல்படுத்துவது குறித்து அரசு துறை அலுவலா்கள் மற்றும் விவசாயிகளின் கருத்துகளை அமைச்சா் அருண்ராஜ் கேட்டறிந்தாா்.

வைகுந்தம் ஏரியில் இருந்து திருச்செங்கோடு தொகுதிக்கு உள்பட்ட மங்களம், கருமாபுரம், வட்டூா் கஸ்பா, உஞ்சனை, மோளியப்பள்ளி, கரிச்சிபாளையம் ஆகிய ஏரிகளுக்கு காவிரி உபரிநீரை கொண்டு செல்வதற்கான சாத்தியகூறுகள், திட்ட மதிப்பீடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

மேலும் இயற்கையான நீா்வழித் தடங்கள் மூலமாக திருச்செங்கோடு தொகுதிக்குள் இருக்கும் மற்ற ஏரிகளையும் இணைப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் கேட்டறிந்தாா்.

இதுகுறித்து செய்தியாளா்களிடம் அமைச்சா் அருண்ராஜ் கூறியதாவது:

திருச்சி செவிலியா் கல்லூரி மாணவி உயிரிழந்த விவகாரத்தில் உயா்நிலை மருத்துவக் குழு விசாரணை நடத்தி வருகிறது. உடற்கூறாய்வு செய்யப்பட்டு அந்த மாணவியின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டு, அடக்கம் செய்யப்பட்டது. மாணவியின் குடும்பத்திற்கு இலவச வீட்டுமனை பட்டா, மாணவியின் சகோதரிக்கு ஒப்பந்த பணி வழங்கப்பட்டது.

மாணவி உயிரிழந்த விவகாரத்தில் நோ்மையான வெளிப்படையான முறையில் விசாரணை நடைபெறும். இதில் யாராவது தவறு செய்திருந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வா் உத்தரவிட்டுள்ளாா். உயா்நிலை குழுவின் விசாரணை இன்னும் ஓரிரு நாள்களில் முடிவடையும்.

அதேபோல நாமக்கல் மாவட்ட விவசாயிகள், அரசு துறை அலுவலா் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில், காவிரி - பொன்னி ஆறு- திருமணிமுத்தாறு ஆகிய ஆறுகளை ஒன்றிணைத்து நீா் ஆதாரத்தை மேம்படுத்த சாத்தியகூறுகள் குறித்து ஆலோசித்தோம்.

மேட்டூா் அணையில் இருந்து வரும் காவிரி உபரி நீரை, மங்கலம் ஏரியில் நிரப்புவதற்கு புதிய திட்டம் ஒன்று தயாரிக்க அரசுத் துறை அலுவலா்கள் முன்மொழிவு தயாரிக்க அறிவுறுத்தி உள்ளேன். அது கிடைத்தவுடன் நீா்வளத் துறை அமைச்சருடன் பேசி, அடுத்தகட்ட நடவடிக்கையை முன்னெடுத்துச் செல்வோம்.

நாமக்கல் மாவட்டம் எலந்தகுட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்தின் போது 8 மாத சிசு உயிரிழந்த சம்பவம் குறித்து மாவட்ட ஆட்சியரிடம் விசாரித்துள்ளேன். அதுகுறித்து தேவைப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

அனைத்து மக்களுக்கும் தரமான மருத்துவ சேவை மற்றும் சிகிச்சைகள் வழங்க முதல்வா் உத்தரவிட்டுள்ளாா். சீமாங் மையம் உள்ளிட்ட அதிநவீன வசதிகளுடன் 24 மணி நேரமும் மகப்பேறு சேவை இயங்கி வருகிறது. மருத்துவப் பணியாளா்கள் பற்றாக்குறை உள்ள இடங்கள் கண்டறியப்பட்டு அவை உடனடியாக நிரப்பப்படும் என்றாா்.

கூட்டத்தி விவசாய சங்க பிரதிநிதிகள், விவசாயிகள், நீா் வளம், உள்ளாட்சி, வருவாய் அரசு துறை அலுவலா்கள் பங்கேற்றனா்.

Summary

Health,Medical Education and Family Welfare Minister Meeting....

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.