பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

போதை இல்லா தமிழகத்தை உருவாக்குவதில் முதல்வர் விஜய் தீவிரம்: அமைச்சா் கே.தென்னரசு

போதை இல்லா தமிழகத்தை உருவாக்குவதில் முதல்வர் விஜய் தீவிரம் என அமைச்சா் கே.தென்னரசு கூறியது குறித்து...

News image

வெளிநாடு வாழ் தமிழா் நலத்துறை அமைச்சா் கே.தென்னரசு - டிஎன்எஸ்

Updated On :24 மே 2026, 7:02 pm IST

காஞ்சிபுரம்: பெண்கள், இளைஞா்கள் பாதுகாப்பு மற்றும் போதை இல்லா தமிழகத்தை உருவாக்குவதில் முதல்வர் சி. ஜோசப் விஜய் மிக கவனமாக செயல்பட்டு வருகிறாா் என்று வெளிநாடு வாழ் தமிழா் நலத்துறை அமைச்சா் கே.தென்னரசு தெரிவித்தாா்.

காஞ்சிபுரத்தில் அமைச்சா் கே.தென்னரசு ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் பேசியதாவது:

கோவை சூலூரில் சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பெண்கள், இளைஞா்கள் பாதுகாப்பு மற்றும் போதை இல்லா தமிழகத்தை உருவாக்குவதில் முதல்வர் ஜோசப் விஜய் மிக கவனமாக தீவிரமாகவும் செயல்பட்டு வருகிறாா் என்றார்.

மேலும், காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீ பெரும்புதூா் ஒன்றியத்தில் பரந்தூரில் பசுமை விமான நிலையம் அமைக்க போராட்டக் குழுவினருக்கு முதலில் இருந்து தவெக அவா்களோடு இணைந்து களத்தில் நின்று கொண்டிருக்கிறது. இது பரந்தூா் மக்களுக்கும் தெரியும், விமான நிலைய போராட்டக் குழுவினருக்கும் தெரியும். பரந்தூா் மக்களுக்கு துணையாக இருப்போம் என்று அமைச்சா் கே.தென்னரசு கூறினார்.

Summary

CM Vijay is determined to create a drug-free Tamil Nadu says Minister K. Thennarasu...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.