மேற்கு வங்கத்தில் நந்திகிராம் தொகுதியில் பாஜக மூத்த தலைவர் சுவேந்து அதிகாரி இன்று(மார்ச் 30) வேட்புமனு தாக்கல் செய்தார்.
294 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட மேற்குவங்கத்தில், 152 தொகுதிகளுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு ஏப். 23 ஆம் தேதியும் 142 தொகுதிகளுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு ஏப். 29 ஆம் தேதியும் நடைபெற உள்ளது. மே 4 அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
தொடர்ந்து 4 ஆவது முறையாக ஆட்சியமைக்க திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மமதாவும் அதேநேரத்தில் முதல்முறையாக ஆட்சியைக் கைப்பற்ற பாஜக தலைவர்களும் முனைப்பு காட்டி வருகின்றனர்.
இந்நிலையில் 152 தொகுதிகளுக்கான முதல் கட்டத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று(மார்ச் 30) தொடங்கியுள்ளது.
மாநில எதிர்க்கட்சித் தலைவரும் பாஜக மூத்த தலைவருமான சுவேந்து அதிகாரி இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். மத்திய பாஜக அமைச்சர் தர்மேந்திர பிரதான் முன்னிலையில் நந்திகிராம் தொகுதியில் சுவேந்து அதிகாரி வேட்புமனு தாக்கல் செய்தார்.
திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த சுவேந்து அதிகாரி கடந்த 2016(திரிணமூல்), 2021(பாஜக) தேர்தல்களில் நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இம்முறை முதல்வர் மமதா போட்டியிடும் பவானிபூர் தொகுதியிலும் சுவேந்து போட்டியிடுகிறார்.
முதல்வர் மமதா பானர்ஜி கடந்த முறை பவானிபூர், நந்திகிராம் ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டு நந்திகிராமில் தோல்வியைத் தழுவிய நிலையில், இம்முறை பவானிபூர் தொகுதியில் மட்டும் போட்டியிடுகிறார்.
முதல் கட்டத் தேர்தலுக்கான வேட்புமனுவை தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் ஏப். 6. அதற்கு மறுநாள் ஏப். 7 ஆம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும். ஏப். 9 வரை வேட்புமனுக்களைத் திரும்பப் பெறலாம்.
Summary
West Bengal Leader of Opposition Suvendu Adhikari files nomination from Nandigram, says BJP will register decisive victory
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!
மேற்கு வங்கத்தில் எந்தத் தொகுதியில் ராஜிநாமா? “பாஜக தலைமை தீர்மானிக்கும்” - சுவேந்து அதிகாரி

அனைத்து இந்துக்களும் பாஜகவுக்கே வாக்களிக்கின்றனர்! சுவேந்து அதிகாரி
மமதா போட்டியிடும் பவானிபூரில் சுவேந்து அதிகாரி வேட்புமனு தாக்கல்!
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை


