மேற்கு வங்க ஆளுநராக அண்மையில் பதவியேற்றுக்கொண்ட ஆர்.என். ரவி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை திங்கள்கிழமை சந்தித்தார்.
இதுகுறித்து குடியரசுத் தலைவர் அலுவலகம் புகைப்படம் ஒன்றை அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளது. அதில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை மேற்கு வங்க ஆளுநர் ஆர்.என். ரவி குடியரசுத் தலைவர் மாளிகையில் சந்தித்தார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேற்கு வங்க ஆளுராக ஆர்.என்.ரவி மார்ச் 12ஆம் தேதி பதவியேற்றார். இந்த நிலையில் குடியரசுத் தலைவர் முர்முவை அவர் சந்தித்திருப்பது குறிப்பிடத்தக்கது. மேற்கு வங்கத்தில் பேரவைத் தோ்தல் தேதிகள் ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்டன.
மொத்தமுள்ள 294 தொகுதிகளில் 152 இடங்களுக்கு ஏப்.23-ஆம் தேதி, மீதமுள்ள 142 இடங்களுக்கு ஏப்.29-ஆம் தேதி என இருகட்ட வாக்குப்பதிவு அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2021 மேற்கு வங்க பேரவைத் தோ்தல் 8 கட்டங்களாக நடத்தப்பட்ட நிலையில், இம்முறை வெறும் 2 கட்டங்களாக தோ்தல் நடைபெறுகிறது.
Summary
Newly appointed West Bengal Governor R N Ravi on Monday called on President Droupadi Murmu at the Rashtrapati Bhavan.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மமதா பதவி விலக மறுப்பு... மேற்கு வங்க சட்டப்பேரவையைக் கலைத்தார் ஆளுநர் ஆர்.என். ரவி!

மேற்கு வங்க தேர்தல்: ஒவ்வொரு வாக்கும் இன்றியமையாதது - ஆளுநர் ஆர்.என். ரவி

தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த மேற்கு வங்க ஆளுநர்!

மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு


