மேற்கு வங்கத்தின் புதிய ஆளுநராக தமிழகத்தின் முன்னாள் ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று (மார்ச் 12) பதவியேற்றார்.
மேற்கு வங்க ஆளுநராகப் பதவி வகித்து வந்த சி.வி. ஆனந்த போஸ் தனது பதவியை மார்ச் 5 ஆம் தேதி ராஜிநாமா செய்தார். இதனைத் தொடர்ந்து மேற்கு வங்கத்தின் புதிய ஆளுநராக ஆா்.என். ரவி நியமிக்கப்பட்டார். இதற்கென, கடந்த புதன்கிழமை (மார்ச் 11) ஆர்.என்.ரவி சென்னையிலிருந்து மேற்கு வங்கத்திற்கு புறப்பட்டார்.
இந்த நிலையில், இன்று லோக் பவனில் நடந்த பதவியேற்பு விழாவில் மேற்கு வங்கத்தின் 22 வது ஆளுநராக ஆர்.என்.ரவி பதவியேற்றார்.
இந்தப் பதவியேற்பு விழா மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, சட்டப்பேரவை சபாநாயகர் பிமன் பானர்ஜி, மூத்த அமைச்சரும் கொல்கத்தா மேயருமான ஃபிர்ஹாத் ஹக்கிம் மற்றும் இடதுசாரி முன்னணித் தலைவர் பிமன் போஸ் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
கொல்கத்தா உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி சுஜோய் பால் அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
எதிர்க்கட்சியான பாஜகவிலிருந்து எந்தத் தலைவரும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Summary
Former Tamil Nadu Governor R.N. Ravi took oath as the new Governor of West Bengal.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மேற்கு வங்க மக்களுக்கு தலைவணங்கிய மோடி! | PM Modi | West bengal CM| BJP|Suvendu Adhikari

மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!

மேற்கு வங்க முதல்வராகிறார் சுவேந்து அதிகாரி! 2 துணை முதல்வர்கள்?

மமதா பதவி விலக மறுப்பு... மேற்கு வங்க சட்டப்பேரவையைக் கலைத்தார் ஆளுநர் ஆர்.என். ரவி!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


