இன்று இறுதியாகும் அமெரிக்கா-ஈரான் அமைதி ஒப்பந்தம்இன்று டெல்டாவில் பலத்த மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமூக விரோதிகளுக்கு எதிரான நடவடிக்கை: 14 நாள்களில் 4,469 போ் கைதுஇந்தியா - நேபாளம் இடையே ரயில் போக்குவரத்து: இரு நாடுகளின் அதிகாரிகள் ஆலோசனைகேரளத்தில் நிபா வைரஸால் ஒருவா் பாதிப்பு: தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்
/

இன்றைய செய்திகள் ஜூன் 12 - நேரலை

முக்கிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள தினமணியுடன் இணைந்திருங்கள்.

News image

முதல்வர் விஜய்.

Updated On :12 ஜூன் 2026, 10:13 pm IST

எடப்பாடி பழனிசாமி ஆட்சியிலும் இதேபோல் மின்வெட்டு இருந்துள்ளது என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

முதல்வர் விஜய் கொல்லூர் மூகாம்பிகை வெள்ளி வாள் காணிக்கை அளித்துள்ளார்.

Summary

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் பயணித்த ரயில் மீது கற்கள் வீசிய சம்பவத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Summary

பாதிக்கப்பட்ட குறுவை விவசாயிகளுக்கு தகுந்த இழப்பீடுகளை ஏக்கர் வீதம் கணக்கிட்டு அரசு வழங்க வேண்டுமென வலியுறுத்துகிறேன்.

Summary

திமுக ஆட்சியில் நடைபெற்ற பெண்களுக்கு எதிரான குற்றங்கள், தற்போதைய ஆட்சியிலும் குறையவில்லை என்று அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

கர்நாடக மாநிலத்திலுள்ள புகழ்பெற்ற கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் தமிழ்நாடு முதல்வர் விஜய் இன்று (ஜூன் 12) வழிபாடு மேற்கொண்டார்.

மேட்டூர் அணையில் 70 அடி நீர் இருப்பதால், திறக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் வினோத் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் விவசாயிகளின் பயிர்க்கடன்களை முழுவதுமாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்று முதல்வர் விஜய்க்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் டிடிவி தினகரன் வெள்ளிக்கிழமை (ஜூன் 12) வலியுறுத்தியுள்ளார்.

தேர்தல் ஆணையத்தின்ப் படிவம் 26-ல் சட்டப்பூர்வ நோட்டீஸ் குறித்து பதிவு செய்யும்படி, எந்தத் தகவலும் இடம்பெறவில்லை என்று காங்கிரஸ் தலைவர் மீனாட்சி நடராஜன் வெள்ளிக்கிழமை பேசியுள்ளார்.

ஒரு சில ஆண்டுகளாக வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யாதவர்களுக்காக ஐடிஆர்-யு கொண்டுவரப்பட்டுள்ளது.

செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்படும்(ஏஐ) வீடியோக்களுக்கு தமிழ் வளர்ச்சித்துறையின் தணிக்கை கட்டாயம் என பள்ளிக் கல்வி, தமிழ் வளா்ச்சி, செய்தி, விளம்பரத் துறை அமைச்சா் ஏ.ராஜ்மோகன் செய்தியாளா்களிடம் தெரிவித்தாா்.

அமர்நாத் யாத்திரைக்கான பாதுகாப்பு மற்றும் செயல்பாட்டுத் தயார்நிலையை ஆய்வு செய்வதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் உயர்நிலை ஆய்வுக் கூட்டம் நடைபெற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழ்ச்சூழலில் அத்தி பூத்தாற்போல சில படங்கள் அவ்வப்போது தோன்றுகின்றன. அந்த வரிசையில் இயக்குநர் மீரா கதிரவன் இயக்கத்தில் உருவாகி வெளியாகியிருக்கிறது ஹபீபி.

கால்பந்து உலகக் கோப்பையின் இரண்டாவது போட்டியில் தென் கொரியா 2-1 என செக் குடியரசு அணியை வீழ்த்தியது.

கேரளத்தில் ஒருவருக்கு நிஃபா வைரஸ் உறுதி செய்யப்பட்டதையடுத்து தமிழகத்தில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

கால்பந்து உலகக் கோப்பையில் மெக்சிகோ அணி 96 ஆண்டுகால சாபத்தை முறியடித்து தான் விளையாடிய முதல் போட்டியிலேயே முதல்முறையாக வென்று வரலாற்றுச் சாதனை நிகழ்த்தியுள்ளது.

Summary

தமிழ்நாட்டில் அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுடன் தொடங்குவதை உறுதிசெய்ய உரிய நிர்வாக உத்தரவுகளைப் பிறப்பிக்கக்கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேட்டர் அணையின் 92 ஆண்டு கால வரலாற்றில் இன்று 61 ஆவது ஆண்டாக குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படவில்லை. தமிழ்நாட்டின் நெல் உற்பத்தி பாதிப்புக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

மதுரையில் நீதிமன்ற வளாகத்தில் ஏற்பட்ட கலவரத்தில் ரூ. 730 மதிப்பிலான பொதுச் சொத்துகளைச் சேதப்படுத்தியதாக 3 பேருக்கு 25 ஆண்டுகள் கழித்து 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

பனிரெண்டாம் வகுப்பில் மதிப்பெண்கள் குறைந்ததால் மன உளைச்சல் ஏற்பட்ட மாணவர்களுக்கு இடையே, இந்த சிபிஎஸ்இ இணையதளத்தில் இருந்த குறைபாடுகளை சுட்டிக்காட்டியிருந்த நிசர்கா அதிகாரிக்கு ஐஐடி-கான்பூரில் வேலை வழங்கப்பட்டிருக்கிறது.

மேக்கேதாட்டு அணை திட்டத்தில் விரைந்து அனுமதி வழங்குமாறு பிரதமர் நரேந்திர மோடியிடம் கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் வலியுறுத்தியுள்ளார்.

ஆபரணத் தங்கத்தின் விலை இரண்டு நாள்களில் பவுனுக்கு ரூ.5,600 குறைந்த நிலையில், ஒரே நாளில் வெள்ளிக்கிழமை(ஜூன் 12) பவுனுக்கு ரூ.2,400 உயர்ந்துது ரூ.1,10,400-க்கு விற்பனையாகிறது. இந்த விலை உயர்வு நகை பிரியர்களை கவலை அடைந்துள்ளனர்.

நடிகரும் இயக்குநருமான ராகவா லாரன்ஸ் அரசியலுக்குள் நுழைவதாக அறிவித்துள்ளார்.

அமெரிக்கா - ஈரான் இடையிலான போர் இன்னும் ஒரு வாரத்துக்குள் முடிவுக்கு வந்துவிடும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

குறுவை நெல் சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில் டெல்டா மற்றும் டெல்டா அல்லாத மாவட்டங்களில் ரூ.134.83 கோடி மதிப்பீட்டில் குறுவை சிறப்புத் தொகுப்புத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று முதல்வர் சி. ஜோசப் விஜய் அறிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.