மேட்டர் அணையின் 92 ஆண்டு கால வரலாற்றில் இன்று 61 ஆவது ஆண்டாக குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படவில்லை. தமிழ்நாட்டின் நெல் உற்பத்தி பாதிப்புக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
மேட்டூர் அணையிலிருந்து குறுவை சாகுபடிக்கு ஆண்டுதோறும் ஜூன் 12 ஆம் தேதி தண்ணீர் திறப்பது வழக்கும். அணையின் நீர் மட்டம் 90 அடியாக இருந்தால் பருவமழையை எதிர்நோக்கி குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறப்பது வழக்கம். நடப்பு நீர்பாசன ஆண்டில் வெள்ளிக்கிழமை(ஜூன் 12) மேட்டூர் அணையின் வரலாற்றில் 92 ஆவது ஆண்டாக குறுவை பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும். நீர் இருப்பும் வரத்தும் திருப்திகரமாக இல்லாத காரணத்தால் மேட்டூர் அணையிலிருந்து குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படவில்லை. இன்று 61 ஆவது ஆண்டாக குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறப்பு தள்ளிப்போனதால் டெல்டா மாவட்டங்களில் நெல் உற்பத்தி கடுமையாக பாதிக்கும் என்று விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
மேட்டூர் அணையிலிருந்து குறித்த நாளில் குறுவை சாகுபடிக்கு 1934, 1935, 1939, 1941, 1965, 1979, 1980, 1984, 1992, 1993, 1994, 1997, 2000, 2001, 2006, 2008, 2020, 2021, 2023, 2025 ஆகிய 20 ஆண்டுகள் மட்டுமே தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அணையின் நீர் இருப்பும் வரத்தும் திருப்திகரமாக இருந்ததால் விவசாயிகளின் வேண்டுகோளை ஏற்று 1936, 1937, 1938, 1940, 1942 ,1943, 1944, 1945, 1947, 2011, 2022 ஆகிய 11 ஆண்டுகள் ஜூன் 12-க்கு முன்பாக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அணையின் நீர் இருப்பும் வரத்தும் திருப்திகரமாக இல்லாத காரணத்தால் 60 ஆண்டுகள் குறுவை சாகுபடிக்கு தண்ணீர் தாமதமாக திறக்கப்பட்டுள்ளது. இதில் பல ஆண்டுகள் குறுவை பரும் முடிந்த பிறகே தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
இன்று(ஜூன் 12) காலை மேட்டூர் அணையின் நீர் மட்டம் 79.56 அடியாக சரிந்தது. அணைக்கு வினாடிக்கு 540 கனஅடி வீதம் தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 41.52 டி.எம்.சியாக உள்ளது.
Summary
Regarding the fact that,in the 92-year history of the Mettur Dam, water has not been released for Kuruvai cultivation this year—marking the 61st such instance...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மேட்டூா் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீா் திறக்கப்படவில்லை

மேட்டூர் அணை நீர் திறப்பு எப்போது? அமைச்சர் வினோத் பதில்!

ஆகஸ்ட் இறுதியில்தான் மேட்டூர் அணை திறப்பு?

மேட்டூர் அணைக்கு நீர் வரத்து குறைவு!
விடியோக்கள்

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி
தினமணி செய்திச் சேவை

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | June 14 முதல் 20 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

ராசாதி ராசா பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு


