அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளரும், கர்நாடக மாநில காங்கிரஸ் துணைத் தலைவருமான சூரஜ் எம். என். ஹெக்டே(55) திடீர் மாரடைப்பு காரணமாக ஞாயிற்றுக்கிழமை(ஜூன் 7) இரவு காலமானார்.
ஹெக்டே உடல்நலக் குறைவு காரணாக, பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு 11 மணியளவில் திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.
இளம் வயதிலேயே கட்சிப் பணியில் முழுமையாக தன்னை அர்ப்பணித்திருந்த அவர், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களின் காங்கிரஸ் கட்சி பொறுப்பாளராகவும், கர்நாடக மாநில உறுதிமொழி அமலாக்க ஆணையத்தின் துணைத் தலைவராகவும் பணியாற்றி வந்தார்.
கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் டி.தேவராஜ் அர்ஸ் பேரன் ஆவார்.
இவரது மறைவிற்கு அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
Summary
Regarding the sudden death of Suraj M.N. Hegde (55), Secretary of the All India Congress Committee and Vice President of the Karnataka State Congress, due to a heart attack...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கர்நாடக அமைச்சரவையில் மகளிர் இடம்பெறாதது ஏமாற்றம்: காங்கிரஸ் தலைவர்

கர்நாடக காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக பி.கே. ஹரிபிரசாத் நியமனம்

பெண்கள் இல்லாத கர்நாடக அமைச்சரவை!
மாநிலங்களவை பதவியும் வேண்டாம்.. ராஜிநாமா பற்றி சித்தராமையா விளக்கம்!
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை


