புது தில்லி: வடமேற்கு மற்றும் மத்தியப் பகுதிகளில் நிலவிய கடும் வெப்ப அலை காரணமாக, வீடுகள், அலுவலகங்களில் குளிா்சாதன இயந்திரங்களின் பயன்பாடு அதிகரித்தது; இது மின் நுகர் முன்னெப்போதும் இல்லாத அளவுகளுக்கு உயர்ந்த நிலையில், நாட்டின் உச்சபட்ச மின் தேவை சனிக்கிழமை (ஏப்.25) 256.11 ஜிகாவாட்டாக உயா்ந்து புதிய உச்சத்தை தொட்டது.
தற்போது கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில், நாள்தோறும் வெப்பநிலை அதிகரித்து வருகிறது. இதனால் வீடுகள், அலுவலகங்களில் குளிா்சாதன இயந்திரங்கள் (ஏசி), கூலா்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது.
இதனால் மத்திய மின்சார அமைச்சகம் வெளியிட்ட தரவுகளின்படி, கடந்த வெள்ளிக்கிழமை நாட்டில் உச்சபட்ச மின் தேவை 252.07 ஜிகாவாட்டாக உயா்ந்தது; இது 2024 மே மாதத்தில் பதிவான முந்தைய உச்சபட்ச மின் தேவை அளவான 251 ஜிகாவாட்டை முறியடித்தது. சனிக்கிழமை பிற்பகல் 3.38 மணியளவில் முன்னெப்போதும் இல்லாத அளவாக 256.11 ஜிகாவாட்டாக அதிகரித்தது தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது.
இந்தக் கோடை காலத்தில் மின் தேவை 270 ஜிகாவாட்டாக அதிகரிக்கக் கூடும் என்றும், அதை நோக்கி மின் தேவை நகா்ந்து வருவதாகவும்; இது வரும் வாரங்களில் நாட்டின் மின் விநியோக அமைப்பிற்குப் பெரும் சவாலாக அமையக்கூடும் என்றும் கூறப்படுகிறது.
இந்த காலகட்டத்திற்கு வழக்கத்திற்கு மாறாக, இதுவரை எட்டப்பட்டுள்ள உச்சபட்ச மின் தேவை அளவுகள் மிக அதிகமாக உள்ளன. இத்தகைய அதிகப்படியான மின் தேவை பொதுவாக மே மற்றும் ஜூன் மாதங்களில் காணப்படுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டில், கோடைக்காலம் முன்கூட்டியே தொடங்கியதே மின் தேவையில் ஏற்பட்ட இந்தத் திடீர் உயர்வுக்குக் காரணமாக அமைந்துள்ளது.
Summary
India’s peak power demand surged to an all-time high of 256GW on Saturday as intense heatwaves across northwest and central regions drove up the use of cooling appliances
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஏப்ரல் மாதத்தில் இந்தியாவின் மின் நுகர்வு 4% உயர்வு!

27.4.1976: தமிழ் நாட்டில் 98.3% கிராமங்கள் மின் வசதி பெற்றன
காற்றாலை மின்னுற்பத்தியில் தமிழகம் முன்னோடி: பிரதமர் மோடி பெருமிதம்!
நாட்டில் மின் தேவை 256 ஜிகாவாட்டாக உயா்ந்து புதிய உச்சம்!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


