தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் மக்கள் குரல் ஓங்கி ஒலிக்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கேட்டுக்கொண்டுள்ளார்.
இது தொடர்பாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் மல்லிகார்ஜுன கார்கே பதிவிட்டுள்ளதாவது:
''மேற்கு வங்கத்தில் இன்று சட்டப்பேரவைத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், அனைத்துக் குடிமக்களும் தவறாமல் வெளியே வந்து, பெருமளவில் வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
உங்களை ஊக்கமிழக்கச் செய்ய முயலும் சக்திகளைக் கண்டு நீங்கள் அஞ்சிவிட வேண்டாம். உங்கள் வாக்குதான் உங்கள் குரல்; அந்தக் குரல் ஓங்கி ஒலிக்க வேண்டும்.
மேற்கு வங்கம் ஜனநாயகம், சமூக நீதி, சமத்துவம் மற்றும் சுதந்திரத்திற்காக உறுதியுடன் நின்ற மாபெரும் தலைவர்களைக் கொண்ட பெருமைமிகு மண்ணாகும். அந்த லட்சியங்கள் சிதையாமல் இருப்பதை நாம் உறுதி செய்ய வேண்டும்.
முதல் முறையாக வாக்களிப்பவர்களுக்கு நான் ஒரு சிறப்பான வேண்டுகோளை விடுக்கிறேன்: உங்கள் உரிமையை உறுதியுடன் பயன்படுத்தி, உண்மையான வளர்ச்சி மாநிலத்தின் ஒவ்வொரு மூலைக்கும் சென்றடைவதை உறுதிசெய்ய உதவுங்கள்'' எனப் பதிவிட்டுள்ளார்.
தமிழ்நாடு தேர்தலையொட்டி கார்கே பதிவிட்டுள்ளதாவது:
தமிழகத்தின் அன்புச் சகோதர சகோதரிகளே, இன்றைய போராட்டம் உங்கள் உரிமைகளைப் பாதுகாப்பதற்கானது. இப்போராட்டம் கூட்டாட்சித் தத்துவம், பகுத்தறிவு, சமத்துவம், நீதி மற்றும் சுதந்திரம் ஆகியவற்றைக் காப்பதற்கானது.
மேலும், இது அனைவரையும் உள்ளடக்கிய நலவாழ்வை உறுதி செய்யவும், உங்கள் முன்னோடித் தலைவர்கள் போற்றிய சமூக நீதிக் கோட்பாடுகளைத் தக்கவைத்துக் கொள்ளவும் உருவானது.
உங்கள் கூட்டாட்சி உரிமைகளைப் பறிக்க முயல்பவர்களுக்கு எதிராக, உங்கள் ஜனநாயக உரிமையைப் பயன்படுத்தி உறுதியாகக் குரல் கொடுக்க வேண்டிய தருணம் இதுவே எனப் பதிவிட்டுள்ளார்.
Summary
Election 2026 Vote against those who snatch away rights Mallikarjun Kharge
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

உதவாக்கரைகள்! டி.கே. சிவகுமார் பெயரை முழக்கமிட்ட தொண்டர்களை கண்டித்த கார்கே!

ஜனநாயகத்தை அழிக்க முக்கிய பதவிகளில் தனது ஆதரவாளர்களை நியமிக்கிறார் பிரதமர் மோடி! - கார்கே காட்டம்!

கர்நாடகத்தில் கார்கே உள்பட 4 மாநிலங்களவை எம்.பி.க்கள் போட்டியின்றித் தேர்வு!

கர்நாடகத்தில் எத்தனை துணை முதல்வர்கள்? கார்கே பதில்!
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |
தினமணி செய்திச் சேவை

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!
தினமணி செய்திச் சேவை

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47
தினமணி செய்திச் சேவை

கண்ணதாசனை எப்படிக் கொண்டாட வேண்டும் ? | Kannadasan 100 | கண்ணதாசன் நூற்றாண்டு தொடக்கம் | Kaviyarasu
தினமணி செய்திச் சேவை

