பெங்களூருவில் நடைபெற்ற காங்கிரஸ் நிகழ்ச்சியில் கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமாருக்கு ஆதரவாக முழக்கங்கள் எழுப்பிய தொண்டர்களை கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கண்டித்தார்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில், கர்நாடக காங்கிரஸ் தலைவர் பி.கே. ஹரிபிரசாத் பதவியேற்பு விழா, பெங்களூருவில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.
அப்போது, மல்லிகார்ஜுன கார்கே பேசத் தொடங்கும்போது, டிகே, டிகே.. என்று முதல்வர் டி.கே. சிவகுமாரின் ஆதரவாளர்கள் முழக்கமிட்டதால், கார்கே ஆத்திரமடைந்தார்.
தொடர்ந்து நிகழ்ச்சிக்கு இடையூறு அளிக்கும் வகையில் முழக்கமிட்ட தொண்டர்களை ’அமைதியாக அமருங்கள் உதவாக்கரைகளா’ என்று கண்டித்த காணொலி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
தொண்டர்களை கண்டித்து அவர் பேசியதாவது:
“நீங்கள் இங்கே கத்துவது நாடு முழுவதும் எதிரொலிக்கப் போகிறதா? இது ஒரு தனிநபரின் நிகழ்ச்சி அல்ல, கட்சியின் நிகழ்ச்சி.
உதவாக்கரைகள். இது தனிநபர் துதிப் பாடும் இடமில்லை. நம் அனைவரையும் ஒன்றிணைக்கும் கட்சியின் நிகழ்ச்சிக்காகவே நாம் இங்கு கூடியுள்ளோம். எனக்கு 58 வருட அரசியல் அனுபவம் உண்டு. பல தலைவர்கள் இங்கு வந்துள்ளனர். கட்சிக்கு அவர்களின் பங்களிப்பு சிறியதாக இருந்தாலும், கட்சி அவர்களுக்கு ஒரு மிகப்பெரிய பொறுப்பை வழங்கியுள்ளது.
இங்கு கத்துபவர்கள் யார் என்பது காணொலியில் பதிவாகியுள்ளது. அந்த காணொலியை ஆய்வு செய்த பிறகு, அவர்களுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுப்பேன்” எனத் தெரிவித்தார்.
வருகின்ற 2028 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு கர்நாடக காங்கிரஸ் தயாராகும் வகையிலும், டி.கே. சிவகுமார் தரப்பிலிருந்து ஏற்பட்ட அழுத்தத்தின் காரணமாகவும், கடந்த மே மாதம் முதல்வர் பதவியிலிருந்து சித்தராமையா விலகினார். தொடர்ந்து, டி.கே. சிவகுமார் முதல்வராகப் பதவியேற்றார்.
டி.கே. சிவகுமாரிடம் இருந்து மாநில காங்கிரஸ் தலைவர் பதவி, பி.கே. ஹரிபிரசாத்துக்கு வழங்கப்பட்டது.
Summary
Useless fellows - Kharge reprimands cadres who chanted D.K. Shivakumar's name
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மேக்கேதாட்டு அணை: கர்நாடகத்தைவிட தமிழ்நாட்டுக்குத்தான் அதிகம் உதவும் - டி.கே. சிவகுமார்

அமைச்சர்களுக்குத் துறை ஒதுக்குவது கட்சித் தலைமையின் முடிவு! - கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் பேச்சு!
மாநிலங்களவைத் தேர்தல்! ராகுல், டி.கே. சிவகுமார் முன்னிலையில் கார்கே வேட்புமனு தாக்கல்!

கர்நாடக முதல்வராக டி.கே. சிவகுமார் நாளை பதவியேற்பு! ராகுல், கார்கே பங்கேற்பு!
விடியோக்கள்

தேசிய கீதம் ஏன் இருமுறை பாடப்பட்டன?: எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கேள்வி!
இணையதளச் செய்திப் பிரிவு

ஹாலிவுட்டில் பயிற்சி: விஜய்யின் அறியாத பக்கங்கள்! | Actor Vijay |
தினமணி செய்திச் சேவை

மேகதாது தீர்மான திருத்தத்தை ஏற்கவில்லை! வெளிநடப்புக்கு பின் EPS பேட்டி | TN Assembly
இணையதளச் செய்திப் பிரிவு

அமோனியா வாயு கசிவு விபத்து பற்றி அமைச்சர் விளக்கம்! | TN assembly
இணையதளச் செய்திப் பிரிவு


