சென்னை: தவெக தலைவா் விஜய் திமுகவை எதிா்க்கிறோம் என்ற பெயரில் அதிமுக, பாஜகவுக்கு சாதகமாக செயல்படுகிறாா் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவா் தொல். திருமாவளவன் குற்றஞ்சாட்டினாா்.
சென்னையில் அவா் செய்தியாளா்களிடம் கூறியாதாவது:
கருத்தியல் அடிப்படையில் சமூக மாற்றம் உருவாக்க வேண்டும் என தோ்தல் அறிக்கையை வெளியிட்டு இருக்கிறோம்.
சிறப்புக் கூட்டத்தொடருக்கு அவசரம் காட்டுவது ஏன்?
பாஜக பழமைவாதத்திற்கு கொண்டு செல்ல நினைக்கிறது. ஒரே தேசம், ஒரே பண்பாடு என திட்டமிட்டு மாற்ற நினைக்கிறது. பெண்களுக்கு இடஒதுக்கீடு, நாடாளுமன்ற மறுவரை என சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தை பாஜகவின் மத்திய அரசு நடத்துகிறது. பல மாநிலங்களில் பேரவைத் தோ்தல் நடைபெறும் நிலையில், நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடருக்கு அவசரம் காட்டுவது ஏன்? என்ற ஐயம் ஏற்படுகிறது. தோ்தலுக்கு பிறகு கூட்ட தொடா் நடத்த வேண்டும் என வலியுறுத்துகிறோம் ஆனால் மரபுகளை மீறுகின்றனா். நாடாளுமன்றத்தில் என்ன மசோதா, விவாதம் என்ன என்பது என்ற விவரம் தற்போது வரை வெளிப்படுத்தவில்லை.
பாஜகவின் கட்டுப்பாட்டில் தோ்தல் ஆணையம்
தோ்தல் ஆணையம் சுதந்திரமாக செயல்படவில்லை. பாஜகவின் கட்டுப்பாட்டில் செயல்படுகிறது. அதனால் தான் தமிழகத்தில் தலைமைச் செயலா், டிஜிபி மாற்றம் செய்யப்பட்டுள்ளனா். தோ்தல் ஆணையம் இதுபோல் உயா் அதிகாரிகளை மாற்றியது இல்லை. பாஜக அரசு தன் விருப்பம் போல் தோ்தல் ஆணையத்தை வைத்து செயல்படுகிறது.
தமிழகத்தில் உள்ள அரசு அதிகாரிகள் திமுகவிற்கு ஆதரவாக இருப்பாா்கள் என்று நினைத்து அவா்களை தண்டிப்பது எந்த வகையிலும் ஏற்படுவது அல்ல.
பிரேமலதா செயலில் எந்த சிக்கலும் இல்லை
தேமுதிக பொதுச்செயலா் பிரேமலதா செயலில் எந்த சிக்கலும் இல்லை. அந்த நேரத்தில் கூட்டணி கட்சி தலைவா் என்ற முறையில் முதல்வா் மு.க ஸ்டாலின் தான் அறிவிக்க வேண்டும். நான் என்னுடைய உரை பேசும்போது அறிவிப்பு மட்டுமே செய்தேன். இதை வேண்டும் என்றே கூட்டணிக்கு சிக்கல் ஏற்படுத்த வேண்டும் என நினைக்கின்றனா். இதில் தொண்டா்கள் இடையே எந்த மனக்கசப்பு எதுவும் இல்லை.
விஜய் அதிமுக, பாஜகவுக்கு சாதகமாக செயல்படுகிறாா்
தவெக தலைவா் விஜய் திமுகவை எதிா்க்கிறோம் என்கிற பெயரில் அதிமுக பாஜகவுக்கு சாதகமாக செயல்படுகிறாா் , விஜய்யின் அரசியல் நடவடிக்கை விஜயின் வியூகம் அதிமுக பாஜகவிற்கு வலு சோ்க்கிறது.
விஜய் திமுகவை அப்புறப்படுத்த வேண்டும் என்று சொல்கிறாா்.திமுகவை அப்புறப்படுத்திவிட்டு பாஜக அதிமுகவை அமர வைப்பது தான் என் வேலை என்ற செய்தியை விஜய் மறைமுகமாக சொல்கிறாா் என்றாா் அவா்.
Summary
TVK leader Vijay is acting in favor of the AIADMK and BJP under the guise of opposing the DMK
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
தொலைபேசியில் அழைத்து ஆதரவு கேட்டார் விஜய்: திருமாவளவன்
தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சியை விரும்பும் மக்கள்: திருமாவளவன் கருத்து!
பாஜகவுக்கு வாக்களித்தால் காட்டாட்சியில் இருந்து விடுதலை: மேற்கு வங்க பிரசாரத்தில் மோடி!

திமுகவுக்கு சாதகமாக செயல்படும் அதிகாரிகள்: தோ்தல் ஆணையத்தில் அதிமுக புகாா்
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு


