கோவை: கோவை புதூர் ரிங் சாலையில் வியாழக்கிழமை இருசக்கர வாகனத்தின் மீது ஏறி படம் எடுத்தாடிய நல்ல பாம்பு விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கோவை புதூர் ரிங் சாலையில் இருசக்கர வாகனத்தில் ஒருவர் சென்று கொண்டிருந்த போது, திடீரென சாலை குறுக்கே ஒரு நல்ல பாம்பு ஊர்ந்து சென்றுள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த வாகனயொட்டி, தனது இருசக்கர வாகனத்தை சாலையோரமாக நிறுத்திவிட்டு, பயத்தில் கீழே இறங்கித் தூரமாக சென்றுள்ளார். ஆனால், அந்தப் பாம்பு அங்கிருந்து நகர்ந்து செல்லாமல், சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த அவரது இருசக்கர வாகனத்தின் மீது மெதுவாக ஏறியது.
பின்னர் இருசக்கர வாகனத்தின் முன் பகுதிக்கு வந்த அந்த நல்ல பாம்பு, அங்கு அமர்ந்தபடி தலையை உயர்த்திப் படம் எடுத்தாடி நீண்ட நேரம் வாகனம் மீது நின்றது. இதைப் பார்த்த அந்த வழியாகச் சென்ற பிற வாகனயொட்டிகள், ஆச்சரியத்துடனும் பயத்துடனும் தங்களது வாகனங்களை நிறுத்தி விட்டு, இந்த அரிய காட்சியைத் தங்களது செல்போன்களில் விடியோ எடுத்தனர்.
சிறிது நேரம் அந்த இருசக்கர வாகனைத்தை தனது 'கட்டுப்பாட்டில்' வைத்திருந்த நல்ல பாம்பு, பின்னர் தானாகவே இறங்கிப் புதருக்குள் மறைந்தது.
இந்த விடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், "அந்தப் பாம்பு தனது பயணத்தைத் தொடர லிப்ட் கேட்டு இருக்கும் போல" என இணையவாசிகள் வேடிக்கையாகக் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அதே சமயம், இதுபோன்ற வனப்பகுதி சாலைகளில் பயணிக்கும் போது வாகன ஓட்டிகள் கவனமாக இருக்க வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.
Summary
Sensation in Coimbatore: Cobra Rears Up and Strikes a Pose on a Two-Wheeler!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சிறுவன் ஓட்டிய பைக் மோதி முதியவா் உயிரிழப்பு

இருசக்கர வாகன விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

இருசக்கர வாகனங்கள் மோதல்: முதியவா் உயிரிழப்பு

இருசக்கர வாகனங்கள் மோதல்: இளைஞா் உயிரிழப்பு
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


