ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

மேற்கு வங்கம்: 7 தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர்கள் மாற்றம்!

மேற்கு வங்கத்தில் 7 தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது பற்றி...

News image

கோப்புப் படம் - ANI

Updated On :8 ஏப்ரல் 2026, 2:27 pm IST

மேற்கு வங்கத்தில் 7 தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

294 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட மேற்குவங்கத்தில், 152 தொகுதிகளுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு ஏப். 23 ஆம் தேதியும் 142 தொகுதிகளுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு ஏப். 29 ஆம் தேதியும் நடைபெற உள்ளது. மே 4 அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

இரண்டாம் கட்டத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் ஏப். 2 தொடங்கி ஏப். 9 வரை நடைபெறுகிறது. ஏப். 10 ஆம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும். ஏப். 13 வரை வேட்புமனுக்களைத் திரும்பப் பெறலாம்.

மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ், பாஜக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் என நான்கு முனைப் போட்டி நிலவுகிறது.

கடந்த முறை காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் இணைந்து போட்டியிட்ட நிலையில் இம்முறை தனித்துப் போட்டியிடுகின்றன.

இந்நிலையில் காங்கிரஸ் சார்பில் அனைத்துத் தொகுதிகளுக்கும் ஏற்கெனவே வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது 7 தொகுதிகளில் வேட்பாளர்கள் மாற்றப்படுவதாக அறிவித்துள்ளது.

இரண்டாம் கட்டத் தேர்தல் நடைபெறும் 7 தொகுதிகளில் புதிய வேட்பாளர்களையும் காங்கிரஸ் அறிவித்துள்ளது.

நாகஷிபரா - தாஹிர் எஸ்கே

சாப்ரா - ஆசிப் கான்

மினாகான் - சுனயனா பிஸ்வாஸ்

மந்திர்பஜார் - சந்த் சர்தார்

ரெய்னா - பம்பா மாலிக்

கேதுகிராமம் - அபு பக்கர்

ஆஸ்கிராம் - தபஸ் பரல்

ஆகிய தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் மாற்றப்பட்டுள்ளனர்.

மேலும் ஹப்ரா தொகுதியில் பிரணாப் பட்டாச்சார்யா போட்டியிடுவதாகவும் அறிவித்துள்ளது.

இரண்டாம் கட்டத் தேர்தலில் முதல்வர் மமதா பானர்ஜி, சுவேந்து அதிகாரி போட்டியிடும் பவானிபூர் தொகுதிக்கு தேர்தல் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

Story image

Summary

Congress replaces candidates in 7 seats for the second phase of elections to West Bengal assembly

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.