மேற்கு வங்கத்தில் பேரவைத் தேர்தலில் 294 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது.
மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 23, 29 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக நடத்தப்படவுள்ளது. மேலும், தேர்தல் பணிகளில் கட்சிகளும் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
இந்த நிலையில், மாநிலத்தின் 294 தொகுதிகளில் காங்கிரஸ் தனித்து போட்டியிடவிருப்பதாக கட்சித் தலைமை அறிவித்துள்ளது.
தில்லியில் மேற்கு வங்கத்தின் தேர்தல் தொடர்பாக நடைபெற்ற காங்கிரஸின் தேர்தல் குழுக் கூட்டத்தில் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் மற்றும் மேற்கு வங்க காங்கிரஸின் முக்கிய தலைவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தின்போது, மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் மற்றும் பாஜகவுக்கு எதிராக 294 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட முடிவு செய்யப்பட்டது.
இதுகுறித்து, மேற்கு வங்கத்துக்கான காங்கிரஸ் கமிட்டியின் பொறுப்பாளர் குலாம் அகமது மிர் அறிவிக்கையில், ஒவ்வொரு தொகுதியிலும் வேட்பாளர்களை நிறுத்த கட்சி முடிவு செய்துள்ளது. ஒரு முழுமையான போட்டியை எதிர்கொள்ளவுள்ளோம்.
மேலும், பவானிபூரில் நிச்சயமாக வலிமை வாய்ந்தவர்தான் போடியிடுவார். எந்த இடத்தையும் காலியாக விடுவதாய் இல்லை என்று தெரிவித்தார்.
மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, திரிணமூல் காங்கிரஸ் சார்பாக பவானிபூரில் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.
மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸுக்கும் பாஜகவுக்கும்தான் பலத்த போட்டி நிலவுவதாகவும், காங்கிரஸ் சமீபமாக பின்னடைவைச் சந்தித்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், காங்கிரஸ் மீண்டும் தன்னை நிலைநிறுத்தும் நோக்கில் நடவடிக்கை எடுத்து வருகிறது.
Summary
West Bengal Assembly Election 2026: Congress to contest alone in all 294 constituencies!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பாஜகவின் சித்தாந்தத்திற்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது: நிதின் கட்கரி

மே 9-ல் மேற்கு வங்கத்தில் பாஜக அரசு பதவியேற்பு! பிரதமர் மோடி, அமித் ஷா பங்கேற்பு!
மேற்கு வங்கத்தில் வரலாறு படைக்கும் பாஜக! முதல்முறையாக ஆட்சியமைக்கிறது!
15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


