கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

பேல்பூரி - 25-10-26

வருங்கால ஐ.ஏ.எஸ்., ஐ. பி.எஸ் அதிகாரிகள் உள்ளே... கவனமாகப் பின்தொடரவும்.

Published On :25 அக்டோபர் 2026, 4:01 pm IST

கண்டது...

(கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சங்கராபுரம் அருகே உள்ள ஒரு கிராமத்தின் பெயர்)

'பொய்க்குணம்.'

- சீனு ராமச்சந்திரன், பைத்தந்துறை.

(தென்காசியில் ஆட்டோ ஒன்றில் கண்ட வாசகம்)

'வருங்கால ஐ.ஏ.எஸ்., ஐ. பி.எஸ் அதிகாரிகள் உள்ளே... கவனமாகப் பின்தொடரவும்.'

-உத்தமன்ராஜா , தென்காசி.

கேட்டது...

(திருப்பூர் பெட்ரோல் பங்க் ஒன்றில் இரு இளைஞர்கள்)

'டேய் மச்சான்... பெட்ரோல் அடிக்கிற அந்தப் பையன் எதுக்கு என்னைப் பார்த்து முறைச்சான்?'

'ரெண்டு லட்ச ரூபாய்க்கு பைக் வாங்கிட்டு, ஐம்பது ரூபாய்க்கு பெட்ரோல் அடிச்சா... முறைக்காம உன்னைக் கொஞ்சுவாங்களா!'

-செ.ந.வடிவேல், திருப்பூர்.

(ஈரோட்டில் உணவு விடுதி ஒன்றில்)

'சர்வர்! எனக்கு ரெண்டு அப்பளம் வைங்க...'

'ஒரு இலைக்கு ஒரு அப்பளம்தான் சார்!'

'நேத்து சாப்பிட்டப்போ நான் அப்பளம் வேணாம்னு சொல்லிட்டேன். இன்னைக்கு அதைச் சேர்த்து வைங்க!'

-கி. சரஸ்வதி, ஈரோடு.

யோசிக்கிறாங்கப்பா

'கவலைகளை நோக்கிப்போனால்... அது நம்மைத் துரத்தும்!

மகிழ்ச்சியை நோக்கிப் போனால்... அது கவலைகளைத் துரத்தும்!'

-அ.கருப்பையா, பொன்னமராவதி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.