தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

சிரி... சிரி...

அந்த ஹோட்டலில் 'தயவு செய்து தும்மாதீர்கள்' என்று போர்டு வச்சிருக்காங்களே, ஏன்?'

News image
Updated On :29 மார்ச் 2026, 4:09 am IST

'அந்த ஹோட்டலில் 'தயவு செய்து தும்மாதீர்கள்' என்று போர்டு வச்சிருக்காங்களே, ஏன்?'

'பேப்பர் தோசை பறந்துவிடுமாம்!'

-மஞ்சுதேவன், பெங்களூரு.



'வீட்டுக்கு வந்த விருந்தாளிங்க வாசலோட திரும்பிப் போய்ட்டாங்களா, எப்படி ?'

'காலியான சிலிண்டரை ஆட்டிச் சத்தம் எழுப்பினேன்... போயிட்டாங்க!'



'மறதியில நாங்க வீட்டை பூட்டாம திறந்து வெச்சு வந்துட்டோம்னு போன்ல கூப்பிட்டுச் சொல்றீயே, நீ யாரு?'

'திருட வந்தவன் சார், பூட்டை உடைக்காமல் திருட கஷ்டமா இருக்கு, அதான் !'

-எம்.பி.தினேஷ், இடையர்பாளையம்.



'என்னம்மா இது... டிபன் கேட்டா வெறும் தட்டு கொண்டு வந்து வைக்கறீயே... காபி கேட்கப் பயமா இருக்கு..!'

'என்ன பயம்?'

'காலி டம்ளர் டபரா வந்தாலும் வரும்!'



' போன்ல ரொம்ப நேரம் பேசுவாரோ?'

'ஆமாம், ராங் நம்பர் ஆனாலும் பத்து நிமிடம் பேசுவார்!'



'முகத்தை உம்முன்னு வச்சிக்காதே!'

'சரி... உர்ருன்னு வச்சிக்கிறேன்!'

-பர்வதவர்த்தினி, பம்மல்.



'வரனுக்கு பாட்டைவிட காமெடி தான் பிடிக்கும்!'

'அதுக்காக, பெண் பாக்க வந்துட்டு, 'பாட வேணாம்... வாழைப்பழ காமெடியை மோனோ ஆக்ட் பண்ணுமான்னு சொன்னா எப்படி?'

-பர்வீன் யூனுஸ், சென்னை.



'இவ்வளவு வரதட்சிணை கேக்கறாங்களே... பையனுக்கு அப்படி என்னதான் இருக்கு?'

'ஏகப்பட்ட கடன் இருக்குன்னு பேசிக்கிட்டாங்க, சார்!'



'இந்த வீட்டுல வேலையை விட்டுட்டு எதிர் வீட்டுல வேலைக்குச் சேரப் போறீயா, ஏன்?'

'இவங்க வீட்டுக்கு அடிக்கடி விருந்தாளிங்க வந்துகிட்டே இருப்பாங்களாம்... ஆனா, இவங்க மட்டும் குடும்பத்தோடு எங்கேயும் போகவே மாட்டாங்களாம்... அதான், வரலைன்னு சொல்லிட்டேன்!'



'சார், அது காபி இல்லே... சாம்பார்!'

' காபியை விட இது நல்லா இருக்குப்பா!'



'ரெண்டு நாளா எனக்கு மனசே சரியில்ல...'

'நான் வேணும்னா நாலு நாள் எங்க அம்மா வீட்டுக்குப் போயிட்டு வரவா?'



'ராத்திரி பயங்கரமான கனவுங்க...!'

'அதுக்காக மூணு தடவை 'தூ...தூ ...'ன்னு காறித் துப்ப என் முகம்தான் கிடைச்சிதா உனக்கு?'



'வக்கீல் சார்... என் மனைவியோட தொண

தொணப்பு தாங்கல...!'

'இதுக்குப் போய் விவாகரத்தா? பேசி சரி பண்ணிக்கலாம் சார்...!'

'பே...சி... யா....?'



'கண்ணு சிமிட்டிக்கிட்டே இருக்கே, ஏன் டாக்டர்?'

'எப்பவும் அப்படி இருக்கா... லேடீஸை பார்க்கிறப்ப மட்டும் அப்படி இருக்கா சார்?'



'கப்பம்தான் செலுத்திவிட்டோமே... மறுபடியும் என்ன ஓலை அமைச்சரே?'

'பயப்படாதீர்கள் மன்னா... கப்பத்தை உடனடியாகக் கொடுத்ததை பாராட்டி வந்த ஓலை இது!'

-வி.ரேவதி, தஞ்சை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.