சாக்லேட்டை நினைச்சாலே இனிக்கும்
சப்புக் கொட்ட நாக்கு ரொம்பத் துடிக்கும்
கண்டவுடன் நான் நாலு எடுப்பேன்
கண்ணுருட்டி அம்மா மிரட்ட திகைப்பேன்!
-
பள்ளிக்கூட பையில் ஒளித்து வைப்பேன்
போகும் வழியில் நானுமதை சுவைப்பேன்
நாக்கில் சாக்லேட் ஆறு ஓடும்
நாள்முழுக்க இனிப்பு நின்று ஆடும்!
-
பிறந்தநாளு என்று நண்பன் தருவான்
பத்துதின்றும் நான்பத்தா தென்பேன்
அப்பாவோ அள்ளிஅள்ளித் தருவார்
அம்மாகண்டால் என்னை அடிக்க வருவாள்
-
அதிக இனிப்பு ஆகாது என்பாள்
அதனால் பல் சொத்தையாகும் சொல்வாள்
அதிர்ச்சியாகி நானுமதைக் கேட்பேன்
ஆனாலும் மறைத்து நானும் தின்பேன்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அவிநாசி: கௌசிகா நதியில் கழிவு கொட்ட வந்த லாரி சிறைப்பிடிப்பு

அவிநாசி அருகே கௌசிகா நதியில் கழிவுகளை கொட்ட வந்த லாரி சிறைப்பிடிப்பு
ஒரு கிலோ கஞ்சா, கஞ்சா சாக்லேட் பறிமுதல்: இளைஞா் கைது

குப்பைகளை கொட்ட இடமில்லாததால் அணிவகுத்து நின்ற குப்பை வாகனங்கள்
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |
தினமணி செய்திச் சேவை

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!
தினமணி செய்திச் சேவை

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47
தினமணி செய்திச் சேவை

கண்ணதாசனை எப்படிக் கொண்டாட வேண்டும் ? | Kannadasan 100 | கண்ணதாசன் நூற்றாண்டு தொடக்கம் | Kaviyarasu
தினமணி செய்திச் சேவை
