மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

அரசு வேலையைத் தாண்டி இளைஞர்கள் சிந்திக்க வேண்டும்! நாகாலாந்து ஆளுநர்!

அரசு வேலைவாய்ப்பைத் தாண்டி புதிய துறைகளில் தங்களை உருவாக்க இளைஞர்கள் முன்வர வேண்டும்...

Governor Nand Kishore Yadav

நாகாலாந்து ஆளுநர் நத்த் கிஷோர் யாதவ் - file photo

Published On :29 செப்டம்பர் 2026, 5:24 pm IST

அரசு வேலைவாய்ப்பைத் தாண்டி இளைஞர்கள் சிந்திக்க வேண்டும், திறன்களை வளர்த்துக்கொள்ள வேண்டும் என நாகாலாந்து ஆளுநர் நத்த் கிஷோர் யாதவ் வலியுறுத்தினார்.

இந்திரா காந்தி மைதானத்தில் நடைபெற்ற மாநில அளவிலான இளைஞர் விழாவில் யாதவ் பங்கேற்றுப் பேசினார்.

அரசு வேலைவாய்ப்பு மட்டும் ஒவ்வொரு இளைஞரின் விருப்பங்களையும் பூர்த்தி செய்துவிட முடியாது. நாம் வெவ்வேறு பாதைகளில் வாய்ப்புகளுக்குத் தயாராக இருக்க வேண்டும்.

திறன், உறுதிப்பாடு, விடாமுயற்சி மற்றும் தொழில்முனைவு மனப்பான்மை ஆகியவற்றைக் கொண்டு, நமது இளைஞர்கள் சுதந்திரமான வாழ்க்கையை அமைத்துக்கொள்வதோடு, சுயச்சார்பு நாகாலாந்தை உருவாக்கவும் குறிப்பிடத்தக்கப் பங்களிப்பை அளிக்க முடியும் என்று அவர் குறிப்பிட்டார்.

அறிவு, நடைமுறைத் திறன்கள், ஒழுக்கம், தொடர் கற்றல் ஆகியவற்றின் மூலம் திறமைகளுக்கு வலுசேர்க்க வேண்டும், டிஜிட்டல் தொழில்நுட்பம், தொழில் முனைவு, விவசாயம், சுற்றுலா, கைவினைப்பொருள்கள், ஆக்கப்பூர்வமான தொழில்கள் மற்றும் பிற வளர்ந்துவரும் துறைகளை ஆகியவற்றை இளைஞர்கள் ஆராய வேண்டும்.

இன்று நாம் பெறப்படும் ஒரு திறன் வாழ்நாள் முழுமைக்குமான சொத்தாக மாறி, வேலைவாய்ப்பு, தொழில்முனைவு மற்றும் பொருளாதார சுதந்திரத்திற்கான வாய்ப்புகளை உருவாக்கக்கூடும் என்று அவர் கூறினார்.

வகுப்பறைகளில் மட்டுமல்லாமல், பயிற்சி, அனுபவம், வழிகாட்டுதல் மற்றும் கடின உழைப்பு ஆகியவற்றின் மூலமும் திறன்கள் பெறப்படுகின்றன.

நாகாலாந்தின் கலாசார பாரம்பரியத்தைப் பாதுகாப்பதோடு, பாரம்பரிய கலை வடிவங்களை புதிய வழிகளில் வெளிப்படுத்த இளைஞர்கள் தங்கள் படைப்பாற்றலைப் பயன்படுத்த வேண்டும் என்றும் ஆளுநர் வலியுறுத்தினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.