மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ஐஐடி மாணவர் தற்கொலை: நீதி கிடைக்கும் வரை உண்ணாவிரதத்தில் ஈடுபட தந்தை முடிவு!

ஐஐடி மாணவர் தற்கொலை விவகாரத்தில் நீதி கிடைக்கும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட மாணவரின் தந்தை முடிவெடுத்துள்ளார்.

தற்கொலை செய்துகொண்ட சாஹில் வகோடேவின் பெற்றோர் - PTI

Published On :27 செப்டம்பர் 2026, 10:20 pm IST

ஐஐடி மும்பை விடுதியில் மாணவர் சாஹில் வகோடே தற்கொலை செய்த விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

ஐஐடி மும்பையில் இரண்டாம் ஆண்டு படித்த மாணவர் சாஹில் வகோடே (22), செப்டம்பர் 18 அன்று மாலை தனது விடுதி அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டார். பருவத் தேர்வின்போது சாட்ஜிபிடி பயன்படுத்தி பரீட்சை எழுதியது ஆசிரியர்களால் கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், சில மணி நேரங்களிலேயே அவர் உயிரிழந்ததாகக் கூறப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, மாணவர் சாதி பாகுபாட்டிற்கு உள்ளானதாக அவரது பெற்றோர் குற்றம் சாட்டினர்.

மாணவரின் தற்கொலைச் சம்பவம் தொடர்பாக விசாரிக்க, ஐஐடி பாம்பே நிர்வாகம் 10 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளது. சாதி பாகுபாடு மற்றும் தற்கொலைக்குத் தூண்டியது ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில் காவல்துறை வழக்குப் பதிந்துள்ளது.

குற்றச்சாட்டின் பேரில் பேராசிரியரான சூர்யநாராயண டுல்லா, பாரபட்சமற்ற விசாரணைக்கு வழிவகுக்கும் விதமாக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், தனது மகனின் மரணத்திற்குப் பொறுப்பானவர்கள் தண்டிக்கப்படும் வரை மும்பை ஆசாத் மைதானத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட மாணவனின் தந்தை முடிவெடுத்துள்ளார்.

இதுபற்றிப் பேசிய அவர், “நான் கைது செய்யப்பட்டாலும் கவலையில்லை. என் மகனுக்கு அரசியலமைப்பு ரீதியாக நீதி கிடைக்க வேண்டும். சத்ரபதி சிவாஜி, பூலே, ஷாஹூ மற்றும் அம்பேத்கர் போன்றோரின் மாநிலம் இது. நான் ஆசாத் மைதானத்தில் எனது போராட்டத்தைத் தொடங்கவுள்ளேன். நீதிக்கான போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுப்பேன்” எனத் தெரிவித்துள்ளார்.

Summary

The father of the IIT student has decided to stage a hunger strike until justice is served in the case of his son's suicide.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.