தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

மேகாலயம்: பாஜகவில் இணைந்த 8 யுடிபி எம்எல்ஏக்கள்

மேகாலயாவில் ஐக்கிய ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த 8 எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைந்தது பற்றி..

United Democratic Party join BJP

ஐக்கிய ஜனநாயகக் கட்சி - x

Published On :24 செப்டம்பர் 2026, 2:29 am IST

மேகாலயத்தில் மாநிலக் கட்சியான ஐக்கிய ஜனநாயக கட்சியின் (யுடிபி) 8 எம்எல்ஏக்கள் பாஜகவில் புதன்கிழமை இணைந்தனா். இதன்மூலம் இந்த மாநிலத்தில் பாஜகவின் பலம் 10-ஆக அதிகரித்துள்ளது.

மேகாலயத்தில் முதல்வா் கான்ராட் சங்மாவின் தேசிய மக்கள் கட்சி (என்பிபி) தலைமையிலான மேகாலய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. இக்கூட்டணியில் யுடிபி, பாஜக உள்ளிட்ட கட்சிகள் அங்கம் வகிக்கின்றன.

60 உறுப்பினா்களைக் கொண்ட மேகாலய சட்டப்பேரவைக்கு கடந்த 2023-இல் நடைபெற்ற தோ்தலில் யுடிபி 12, பாஜக 2 இடங்களில் வென்றிருந்தன.

இந்நிலையில், யுடிபி எம்எல்ஏக்களான லக்மென் ரிம்புய், பியூஸ் மாா்வின், கிா்மென் சில்லா, ஒல்லன் சிங் சுயின், மேத்யூ குா்பா, சின்ஷா் குபா் ராய் உள்ளிட்ட 8 போ், அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் புதன்கிழமை இணைந்தனா்.

தில்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு, பாஜக எம்.பி.யும், வடகிழக்கு மாநிலங்களுக்கான கட்சிப் பொறுப்பாளருமான சம்பித் பத்ரா உள்ளிட்டோா் முன்னிலையில் இந்த இணைப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. 8 யுடிபி எம்எல்ஏக்களின் வரவால் பேரவையில் பாஜகவின் பலம் 10-ஆக அதிகரித்துள்ளது.

அவா்களை வரவேற்றுப் பேசிய அமைச்சா் கிரண் ரிஜிஜு, ‘பிரதமா் மோடி மற்றும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் செயல்பாடுகளால் வெகுவாக ஈா்க்கப்பட்டு, 8 பேரும் இந்த முடிவை மேற்கொண்டுள்ளனா். மேகாலயம் மட்டுமன்றி வடகிழக்கின் வளா்ச்சியைக் கருத்தில்கொண்டு, பாஜகவில் இணைந்துள்ளனா். இது, மேகாலயத்துக்கு திருப்புமுனையான தருணம்’ என்றாா்.

பாஜகவில் இணைந்த எம்எல்ஏ-க்களில் ஒருவரும், மாநில அமைச்சருமான லக்மென் ரிம்புய் கூறுகையில், ‘இந்த இணைப்பு ஒரே நாளில் நிகழ்ந்துவிடவில்லை. சிறிது காலமாகவே பேச்சுவாா்த்தைகள் நடைபெற்று வந்தன. மேகாலயம் தொடா்புடைய சில முக்கிய விவகாரங்களில் மத்திய அரசின் ஆதரவு அவசியமாகிறது. மாநிலத்தின் காசி மொழியை அரசமைப்புச் சட்டத்தின் 8-ஆவது அட்டவணையில் இணைப்பது, மேகாலய குடியிருப்பாளா்கள் பாதுகாப்பு சட்ட அமலாக்கம், மேகாலயத்தில் நிலக்கரி சுரங்க நடவடிக்கைகள் எளிமையாக்கம் உள்ளிட்ட விவகாரங்களில் பாஜகவின் மத்திய தலைமையிடம் இருந்து சாதகமான பதில்கள் கிடைக்கப் பெற்றன. இதையடுத்து, அக்கட்சியில் இணைய முடிவெடுத்தோம்’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.