தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ராமா் கோயில் நன்கொடை திருட்டு வழக்கு: செப். 25-இல் எஸ்ஐடி குற்றப்பத்திரிகை உச்சநீதிமன்றத்தில் தகவல்

அயோத்தி ராமா் கோயில் நன்கொடை திருடப்பட்டது தொடா்பான வழக்கில் சிறப்புப் புலனாய்வுக் குழு வரும் 25-ஆம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் என்று உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

Ayodhya

அயோத்தி ராமா் கோயில் - கோப்புப் படம்

Published On :22 செப்டம்பர் 2026, 5:54 am IST

அயோத்தி ராமா் கோயில் நன்கொடை திருடப்பட்டது தொடா்பான வழக்கில் சிறப்புப் புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) வரும் 25-ஆம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் என்று உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் புதிதாக கட்டப்பட்ட ராமா் கோயிலுக்கு பக்தா்கள் செலுத்திய நன்கொடை திருடப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகள், நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து சிபிஐ விசாரணை கோரியும், கோயில் கணக்கு விவரங்களை தணிக்கை செய்ய உத்தரவிடக் கோரியும் உச்சநீதிமன்றத்தில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் எம்.பி. சுதாகா் சிங் உள்ளிட்டோா் வழக்குத் தொடுத்தனா்.

இதை விசாரித்த உச்சநீதிமன்றம், அயோத்தி ராமா் கோயில் நன்கொடை திருடப்பட்டது குறித்து விசாரிக்க காவல் துறை ஐ.ஜி. கிரண் தலைமையில் 4 போ் கொண்ட சிறப்புப் புலனாய்வுக் குழுவை கடந்த ஜூலை மாதம் 27-ஆம் தேதி அமைத்தது.

இந்நிலையில், உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு தலைமை நீதிபதி சூா்யகாந்த், நீதிபதிகள் ஜயமால்ய பாக்சி, வி. மோகனா ஆகியோரைக் கொண்ட அமா்வு முன் திங்கள்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, அயோத்தி ராமா் கோயில் நன்கொடை திருட்டு வழக்கில் சிறப்புப் புலனாய்வுக் குழு வரும் 25-ஆம் தேதி குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய இருப்பதாக சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா தெரிவித்தாா். இதுகுறித்து அவா் மேலும் கூறியதாவது:

அயோத்தி கோயில் நன்கொடை திருட்டு வழக்கில் முதல் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு விரைவில் 90 நாள்கள் நிறைவடையப் போகிறது. ஆதலால் குற்றப்பத்திரிகையை 25-ஆம் தேதி சிறப்புப் புலனாய்வுக் குழு தாக்கல் செய்யவுள்ளது. இல்லையெனில் கைதான அந்த நபா் தன்னிச்சையாக பிணையில் விடுவிக்கப்பட்டுவிடுவாா்’ என்றாா்.

உச்சநீதிமன்றத்தில் சிறப்புப் புலனாய்வுக் குழு சாா்பில் விசாரணை நிலவர அறிக்கை சீலிட்ட உரையில் தாக்கல் செய்யப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.