மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

என் பாட்டி எனக்கு அளித்த அழகான பரிசு! இந்திரா காந்தியை நினைவு கூர்ந்த ராகுல் பிரியங்கா!

இந்திரா காந்தியின் நினைவு நாளில் ராகுல் காந்தி பகிர்ந்த பாட்டியின் அழகான பரிசு பற்றி...

Rahul recalls 'beautiful gift'

இந்திரா காந்தி நினைவிடத்தில் ராகுல் - PTI

Published On :31 அக்டோபர் 2026, 1:00 pm IST

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் நினைவு நாளையொட்டி அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர ராகுல் காந்தி மரியாதை செலுத்தினார்.

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் நிறைவு நாள் இன்று (அக். 31) அனுசரிக்கப்படுகிறது. இந்தியா முழுவது உள்ள காங்கிரஸ் தொண்டர்கள் அவரது நிறைவு நாளை அனுசரித்து வருகின்றனர்.

தனது பாடியும், முன்னாள் பிரதமருமான இந்திரா காந்தியின் நினைவு நாளில், அவர் சிறுவயதில் தனக்குக் கற்றுக்கொடுத்த உபநிடத மந்திரம் ஒன்றைக் காங்கிரஸ் தலைர் ராகுல் காந்தி நினைவுகூர்ந்தார். இதனை அவர் இந்திரா காந்தி தனக்கு வழங்கிய அழகான பரிசு என்று குறிப்பிட்டார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில்,

உங்கள் மடியில் அமர்ந்து, இரு கைகளையும் பிடித்துக்கொண்டு, நீங்கள் கூறிய வார்த்தைகளைக் கேட்டு, அதனை மீண்டும் சொல்லிக்கொண்டிருந்தேன்.

'அசதோ மா சத்கமய; தமஸோ மா ஜ்யோதிர்கமய; மத்யோர்மா அம்ருதம் கமய; ஓம் சாந்தி, சாந்தி, சாந்தி.'

பாட்டி, நீங்கள் எனக்கு எவ்வளவு அழகான பரிசை வழங்கியிருக்கிறீர்கள்! என்னே ஒரு பரிசு! நான் இதை ஒருபோதும் கற்பனை செய்துகூடப் பார்த்ததில்லை," என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.

ராகுல் காந்தி பகிர்ந்துள்ள இந்த மந்திரம், 'பிருஹதாரண்யக உபநிடதத்திலிருந்து எடுக்கப்பட்டது.

இந்த மந்திரத்தின் சாராம்சம், ஒருவரை அநீதியிலிருந்து சத்தியத்திற்கும், இருளிலிருந்து ஒளிக்கும், மரணத்திலிருந்து அறியாமையை நோக்கி அழைத்துச் செல்லுமாறு சொல்லும் பிரார்த்தனை ஆகும்.

காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வத்ராவும் தனது பாட்டி இந்திரா காந்தியை நினைவு கூர்ந்தார். அவருடன் சிறுவயதில் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்துள்ள அவர், இந்திரா காந்தியை வானத்தைப் போலச் சுதந்திரமானவர், கடலைப் போல ஆழமானவர், பூமியைப் போல உறுதியானவர், கனன்று எரியும் நெருப்பை விடவும் பிரகாசமானவர் என்று வர்ணித்துள்ளார்.

இந்தியாவின் முதல் மற்றும் ஒரே பெண் பிரதமரான இந்திரா காந்தி, 1984-ஆம் ஆண்டு அக்டோபர் 31-ஆம் தேதி புது தில்லியில் படுகொலை செய்யப்பட்டார். அவர் ஜனவரி 1966 முதல் மார்ச் 1977 வரையிலும், மீண்டும் ஜனவரி 1980 முதல் தனது மறைவு வரையிலும் இந்தியாவின் பிரதமராகப் பணியாற்றினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.