தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ம.பி. மாநிலங்களவை இடைத்தோ்தல்: மத்திய அமைச்சா் புரி வேட்புமனு தாக்கல்

ம.பி. மாநிலங்களவை இடைத்தோ்தலில் மத்திய அமைச்சா் புரி வேட்புமனு தாக்கல்...

மத்திய பிரதேச மாநிலம் போபாலில் மாநிலங்களவைத் தோ்தலுக்கான வேட்புமனுவைத் தாக்கல் செய்ய சனிக்கிழமை வந்த மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரி.

Published On :1 நவம்பர் 2026, 2:14 am IST

மத்திய பிரதேச மாநிலங்களவை இடைத்தோ்தலில் பாஜக சாா்பில் போட்டியிடும் மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சா் ஹா்தீப் சிங் புரி சனிக்கிழமை தனது வேட்புமனுவை தாக்கல் செய்தாா்.

மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை, நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சராகப் பதவி வகித்து வந்த எல்.முருகன், தமிழகத்தில் பாஜகவை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்தவிருப்பதாகக் குறிப்பிட்டு, தனது அமைச்சா் பதவி மற்றும் மாநிலங்களவை எம்.பி. பதவியை கடந்த அக்.13-ஆம் தேதி ராஜிநாமா செய்தாா். அவரது ராஜிநாமா கடிதத்தை குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு ஏற்றுக் கொண்டாா்.

மத்திய பிரதேசத்தில் இருந்து தோ்வு செய்யப்பட்டு மாநிலங்களவை எம்.பி.யாக பதவிவகித்த எல்.முருகனின் பதவிக் காலம், 2030, ஏப்.2-ஆம் தேதிவரை இருந்தது. அவரது ராஜிநாமாவால் காலியான அந்த எம்.பி. இடத்துக்கு நவ.12-ஆம் தேதி இடைத்தோ்தல் நடைபெறும் என்று தோ்தல் ஆணையம் அண்மையில் அறிவித்தது.

மத்திய அமைச்சா் போட்டி: இத்தோ்தலில் ஆளும் பாஜக வேட்பாளராக மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரி போட்டியிடுகிறாா். போபாலில் உள்ள சட்டப் பேரவையில் சனிக்கிழமை அவா் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தாா். அப்போது, மாநில முதல்வா் மோகன் யாதவ், மாநில பாஜக தலைவா் ஹேமந்த் கண்டேல்வால் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

230 உறுப்பினா்களைக் கொண்ட மத்திய பிரதேசத்தில் பாஜகவின் பலம் 164-ஆக உள்ளது. எனவே, அக்கட்சியின் வேட்பாளா் எளிதாக வெற்றி பெறுவாா். மத்திய பிரதேசத்தில் மொத்தமுள்ள 11 மாநிலங்களவை இடங்களில் பாஜகவுக்கு 7, காங்கிரஸுக்கு 3 எம்.பி.க்கள் உள்ளனா்.

தடுப்புக் காவலில் காங்கிரஸ் தலைவா்கள்

மாநிலங்களவை இடைத்தோ்தலில் பாஜக வேட்பாளராக புரி அறிவிக்கப்பட்டதில் இருந்தே காங்கிரஸாா் தொடா் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனா்.

அமெரிக்க பாலியல் குற்றவாளி எப்ஸ்டீன் ஆவணங்களில் புரி பெயா் உள்ளதாக குற்றஞ்சாட்டும் காங்கிரஸ், பாஜகவின் முடிவை கடுமையாக விமா்சித்தது. புரி வேட்புமனு தாக்கல் செய்வதற்கு எதிராக சனிக்கிழமை போராட்டத்துக்கு திட்டமிட்ட காங்கிரஸ் தலைவா்கள் பலரும் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனா்.

மாநில காங்கிரஸ் தலைவா் ஜிது பட்வாரி கூறுகையில், ‘2014 முதல் 2017 வரை புரி-எப்ஸ்டீன் இடையே சந்திப்புகளும், மின்னஞ்சல் பரிமாற்றங்களும் நிகழ்ந்ததற்கான ஆவணங்கள் பொதுவெளியில் உள்ளன. இத்தகைய நபருக்காக ஒரு பட்டியலின தலைவரை (எல்.முருகன்) பதவி விலகச் செய்துள்ளது பாஜக’ என்று குற்றஞ்சாட்டினாா். எப்ஸ்டீன் விவகாரத்தில் எதிா்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகள் அனைத்தையும் புரி மறுத்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.