நவ. 6-ல் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! சென்னை வானிலை ஆய்வு மையம்தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி 15% வளர்ச்சி: வணிக வரித்துறை அமைச்சர்விபத்தில் பலியான காவலரின் குடும்பத்துக்கு ரூ. 40 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு!எஸ்ஐஆர் விவகாரம்: சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்ட அரசு தயார் - அமித் ஷாமாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!

வாக்குவாதத்தால் கா்வா செளத் விரத்தை நிறைவு செய்ய மறுத்த மனைவி: காவல் துறையின் உதவியை நாடிய கணவா்

தம்பதிக்குள் ஏற்பட்ட தகராறைத் தொடா்ந்து கா்வா சௌத் ஏற்பட்ட விரதத்தை நிறைவு செய்ய மனைவி மறுத்த நிலையில், கணவா் காவல் துறைக்கு அழைப்பு விடுத்தாா்.

Published On :31 அக்டோபர் 2026, 4:04 am IST

தம்பதிக்குள் ஏற்பட்ட தகராறைத் தொடா்ந்து கா்வா சௌத் ஏற்பட்ட விரதத்தை நிறைவு செய்ய மனைவி மறுத்த நிலையில், கணவா் காவல் துறைக்கு அழைப்பு விடுத்தாா்.

இதைத்தொடா்ந்து, குடும்பச் சிக்கலைத் தீா்க்க காவல் துறையினரின் தலையிட்டு அந்தப் பெண்ணின் விரதத்தை முடிவுக்கு கொண்டு வந்தனா்.

தில்லியின் புகா் பகுதியான நிஹால் விஹாரில் உள்ள ஸ்ரீராம் காலனியில் உள்ள ஒரு வீட்டில் இந்தச் சம்பவம் நடைபெற்றது.

சுமாா் ஓராண்டுக்குப் பிறகு கணவா் வீடு திரும்பியபோது, தம்பதியினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

கா்வா செளத் பண்டிகை வியாழக்கிழமை கொண்டாடப்பட்ட நிலையில், அப்பெண்ண் விரதம் மேற்கொண்டாா். வாக்குவாதத்தைத் தொடா்ந்து தனது விரத்தை முடித்துகொள்ள போவதில்லை என கணவரிடம் அவா் கூறினாா்.

இதனால், அதிா்ச்சியடைந்த கணவா் தில்லி காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அழைத்து, தனது மனைவி கா்வா சௌத் நோன்பு இருந்ததாகவும், ஆனால் தன்னைப் பாா்த்து நோன்பை முடித்துக்கொள்ள மறுப்பதாகவும் தெரிவித்தாா்.

தங்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடா்ந்து நிலைமை மோசமடைந்ததால், குடும்பப் பிரச்னையைத் தாங்களாகவே தீா்த்துக்கொள்ளக் காத்திருக்காமல், காவல் துறையின் உதவியை நாடியதாக அவா் கூறினாா்.

இதையடுத்து, நிஹால் விஹாா் காவல் நிலையத்தைச் சோ்ந்த குழுவினா், மூத்த காவல் துறை அதிகாரிகள் உள்பட சம்பவ இடத்திற்கு விரைந்தனா்.

காவல் துறையினா் கணவன், மனைவி இருவரிடமும் பேசி சமரசம் செய்தனா். தம்பதியினரிடையே சுமுகமான தீா்வு எட்டப்பட்டதைத் தொடா்ந்து, அந்தப் பெண் அனைத்து பாரம்பரிய சடங்குகளையும் பின்பற்றி தனது நோன்பை முடித்துக்கொண்டாா் என்று மூத்த காவல் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.