தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ஒர்னாப் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்ய மத்தியக் குழு ஆந்திரம் வருகை!

ஒர்னாப் புயலால் ஏற்பட்ட சேதங்களை மதிப்பீடு செய்ய மத்திய குழு ஆந்திரத்தில் ஆய்வு செய்வது பற்றி..

Central team

வெள்ள சேதங்களை ஆய்வு செய்யும் மத்திய குழு - file photo

Published On :31 அக்டோபர் 2026, 3:44 pm IST

ஓர்னாப் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்ய ஏழு பேர் கொண்ட மத்தியக் குழு ஆந்திர மாநிலத்திற்கு வருகை தந்துள்ளது.

ஆந்திர மாநிலத்தில் ஒர்னாப் புயலால் ஏற்பட்ட கனமழை காரணமாக, வீடுகள் சேதமடைதல், தங்கள் முறிந்து விழுதல் உள்பட பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டது. கனமழையால் நெற்பயிர்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. ஒர்னாப் புயலின் தாக்கம் பாதிக்கப்பட்ட இடங்களில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதனிடையே ஒர்னாப் புயலால் ஏற்பட்ட சேதங்களை மதிப்பீடு செய்ய மத்தியக் குழுவை நியமிக்க மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கடிதம் எழுதியிருந்தார்.

இந்த நிலையில், மத்திய உள்துறை அமைச்சகத்தைச் சேர்ந்த சித்தரஞ்சன் தாஸ் தலைமையிலான 7 பேர் அடங்கிய மத்தியக் குழு ஆந்திர மாநிலத்திற்கு வருகை தந்துள்ளது.

இந்த மத்தியக் குழுவானது இன்றும், நாளையும் ஆந்திரத்தில் புயலால் பாதிக்கப்பட்ட இடங்களைப் பார்வையிடுகிறது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில்,

ஏழு பேர் கொண்ட மத்தியக் குழு ஆந்திரத்துக்கு வருகை தந்துள்ளது. இந்தக் குழு இன்றும், நாளையும் ஒர்னாப் புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை ஆய்வு செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.