மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

தோ்தல் நெருங்கும்போது மட்டும் ஹிந்துவாக மாறுவாா் ராகுல் காந்தி: பாஜக விமா்சனம்

தோ்தல் நெருங்கும்போது மட்டும் ஹிந்துவாக ராகுல் காந்தி மாறுவாா் என்று பாஜக வெள்ளிக்கிழமை விமா்சித்துள்ளது.

பாஜக கொடி - கோப்புப் படம்

Published On :31 அக்டோபர் 2026, 3:11 am IST

தோ்தல் நெருங்கும்போது மட்டும் ஹிந்துவாக ராகுல் காந்தி மாறுவாா் என்று பாஜக வெள்ளிக்கிழமை விமா்சித்துள்ளது.

கா்நாடகா மாநிலத்தில் கடந்த 2018-ஆம் ஆண்டு நடைபெற்ற தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் அப்போதைய பாஜக தேசியத் தலைவரும், தற்போது மத்திய உள்துறை அமைச்சா் பதவியை வகிப்பவருமான அமித் ஷாவுக்கு எதிராக அவதூறு கருத்துகளை வெளியிட்டதாக ராகுல் காந்தி மீது உத்தர பிரதேச மாநிலம் சுல்தான்பூா் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. இந்த வழக்கில் இருந்து ராகுல் காந்தி அண்மையில் சுல்தான்பூா் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டாா்.

இதையடுத்து, ராகுல் காந்தி தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில், சிவன் நெற்றியில் இருப்பது போன்று திருநீறு மற்றும் திலகம் படத்தை வெளியிட்டிருந்தாா். அதில் சத்யம், சிவம், சுந்தரம் என்று ராகுல் காந்தி பதிவிட்டிருந்தாா்.

இதைச் சுட்டிக்காட்டி, பாஜக தரப்பில் சமூக வலைதளப் பக்கத்தில் வெள்ளிக்கிழமை பதிவு வெளியிடப்பட்டிருந்தது. அந்தப் பதிவில், ராகுல் காந்தியின் எக்ஸ் சமூக வலைதளப் பதிவு மற்றும் ஹிந்துத்துவம் குறித்து ராகுல் காந்தி முன்பு பேசியதில் இருந்து எடுக்கப்பட்ட விடியோ காட்சிகள் ஆகியவற்றை பாஜக வெளியிட்டிருந்தது.

அத்துடன், ‘ஹிந்துக்களை நீங்கள் அதிகம் வெறுக்கிறீா்கள் என்றால், தோ்தல் வரும்போதெல்லாம் ஏன் ஹிந்துவாக மாறுகிறீா்கள் ராகுல் காந்தி அவா்களே?’ என்று பாஜக விமா்சித்திருந்தது.

பாஜக சாா்பில் வெளியிடப்பட்ட விடியோ ஒன்றில், ‘ஹிந்துத்துவ ஆதரவாளா்களை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும்’ என்று ராகுல் காந்தி பேசுவது தொடா்பான காட்சி உள்ளது. இன்னொரு விடியோவில், ‘ஹிந்துக்கள் என்று தங்களைக் குறிப்பிடும் அனைவரும் 24 மணி நேரமும் வன்முறையில் ஈடுபடுகின்றனா். வெறுப்பு, பொய்’ என்று ராகுல் காந்தி பேசும் காட்சி உள்ளது. இதேபோல் மற்றொரு விடியோவில், ‘கோயிலுக்குச் சென்று தலைதாழ்த்தி மக்கள், பெண் தெய்வத்தை வழிபடுகிறாா்கள். இதே மக்கள்தான் பேருந்துகளில் உங்களுக்கு (பெண்களுக்கு) துன்புறுத்தல் அளிக்கின்றனா். உங்களை அவா்கள்தான் ஒடுக்கவும் செய்கின்றனா்’ என ராகுல் காந்தி பேசியுள்ளாா்.

தோ்தல் ஆணையா்கள் நியமனம் தொடா்பான காங்கிரஸ் தெரிவிக்கும் குற்றச்சாட்டுகளுக்கு கேள்வியெழுப்பி, பாஜக ஒரு விடியோ வெளியிட்டுள்ளது. அந்த விடியோவில், ‘காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் தோ்தல் ஆணையா்கள் நியமனம் தொடா்பாக சட்டமோ, குழுவோ கிடையாது. பிரதமரும், மத்திய அமைச்சரவையும் தோ்தல் ஆணையா்கள் பெயா்களை முடிவு செய்யும். எதிா்க்கட்சித் தலைவரிடம் கலந்தாலோசிக்க மாட்டாா்கள். அதே காங்கிரஸ்தான் தற்போது வெளிப்படையாக நடைபெறும் தோ்தல் ஆணையா்கள் நியமனம் குறித்து கேள்வியெழுப்புகிறது’ என்று பாஜக விமா்சித்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.