பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

சௌதி அரேபியாவுக்கான ஏர் இந்தியா விமானங்கள் ரத்து நவ.14 வரை நீட்டிப்பு!

சௌதி அரேபியாவுக்கான விமான சேவைகள் ரத்தை நவ.14-ஆம் தேதி வரை நீட்டிப்பதாக ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்திருப்பது பற்றி...

Air India, AI Express extend cancellation of Saudi Arabia flights till Nov 14

ஏர் இந்தியா

Published On :1 நவம்பர் 2026, 4:42 pm IST

மேற்காசியாவில் நிலவி வரும் பதற்றம் காரணமாக, சௌதி அரேபியாவுக்கான விமான சேவைகள் ரத்தை நவ.14-ஆம் தேதி வரை நீட்டிப்பதாக ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் வெள்ளிக்கிழமை அறிவித்தன.

கடந்த வாரம், இவ்விரு விமான நிறுவனங்களும் ரியாத் மற்றும் தம்மாம் நகரங்களுக்கான சேவைகளை நவம்பர் 7 வரையிலும், ஜித்தாவுக்கான விமானச் சேவைகளை அக்டோபர் 31 வரையிலும் ரத்து செய்தன. இதேபோல் இண்டிகோ மற்றும் ஆகாசா ஏர் நிறுவனங்களும் சௌதி அரேபியாவுக்கான தங்களது விமானச் சேவைகளை ரத்து செய்துள்ளன.

இண்டிகோ நிறுவனம் ஜெட்டா, தம்மாம் மற்றும் மதீனா ஆகிய இடங்களுக்குச் செல்லும் மற்றும் அங்கிருந்து வரும் விமானங்களை நவம்பர் 14 வரை ரத்து செய்துள்ளது. அதே நேரத்தில் ஆகாசா ஏர் நிறுவனம் ரியாத்தை இணைக்கும் சேவைகளை நவம்பர் 30 வரையிலும், ஜெட்டாவை இணைக்கும் சேவைகளை நவம்பர் 10 வரையிலும் ரத்து செய்துள்ளது.

யேமனில், ஹூதி கிளர்ச்சிப் படைக்கும் சௌதி அரேபியாவின் ஆதரவு பெற்ற அரசுப் படைக்கும் இடையேயான மோதல் கடந்த சில வாரங்களாக நடைபெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக, சௌதி அரேபியாவின் எல்லைப் பகுதிகள் மற்றும் முக்கிய இடங்களைக் குறிவைத்து ஹூதிகள் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகின்றன.

இந்தத் தாக்குதல்களால் ஏற்பட்டுள்ள பாதுகாப்பு அச்சுறுத்தல் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாக, பல்வேறு உலக நாடுகளைச் சேர்ந்த சர்வதேச விமான நிறுவனங்கள் சௌதி அரேபியாவுக்கான தங்களது விமான சேவைகளைத் தொடர்ந்து ரத்து செய்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Summary

Air India and Air India Express on Friday announced extending the cancellation of their flights connecting Saudi Arabian cities till November 14 due to the prevailing situation in the region.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.