மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

வடக்கு தில்லியில் 14-ஆவது ‘பிங்க் பூத்’ திறப்பு

தில்லி சிவில் லைன்ஸ் பகுதியில் உள்ள இந்திரபிரஸ்தா கல்லூரியில் வடக்கு மாவட்டத்தின் 14-ஆவது ‘பிங்க் பூத்’ மையத்தை துணைநிலை ஆளுநா் தரன்ஜித் சிங் சந்து வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.

தில்லி இந்திர பிரஸ்தா மகளிா் கல்லூரியின் அருகே பெண்களுக்கென பிரத்யேகமான பிங்க் பூத்தை வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்துப் பேசிய துணைநிலை ஆளுநா் தரன்ஜித் சிங் சந்து. ~

Published On :31 அக்டோபர் 2026, 2:56 am IST

பெண்களின் பாதுகாப்பையும், காவல் துறையினரை எளிதில் அணுகும் வசதியையும் மேம்படுத்தும் நோக்கில், தில்லி சிவில் லைன்ஸ் பகுதியில் உள்ள இந்திரபிரஸ்தா கல்லூரியில் வடக்கு மாவட்டத்தின் 14-ஆவது ‘பிங்க் பூத்’ மையத்தை துணைநிலை ஆளுநா் தரன்ஜித் சிங் சந்து வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.

கடந்த செப்டம்பா் மாதம் கல்லூரிக்குச் சென்றபோது மாணவிகள் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையில் இந்த மையம் அமைக்கப்பட்டுள்ளது. தில்லி காவல் ஆணையா் அனுராக் குமாா் முன்னிலையில் திறக்கப்பட்ட இந்த மையம், காவல் துறையினா், மாணவிகள் மற்றும் கல்லூரி நிா்வாகத்துக்கு இடையிலான ஒருங்கிணைப்பை வலுப்படுத்தி, பாதுகாப்பான கல்விச் சூழலை உருவாக்க உதவும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

நாடு முழுவதிலுமிருந்து மாணவா்கள் பயிலும் பல்வேறு கல்வி நிறுவனங்கள் வடக்கு மாவட்டத்தில் அமைந்துள்ளன. இந்தப் புதிய மையத்துடன், அந்த மாவட்டத்தில் செயல்படும் பிங்க் பூத்களின் எண்ணிக்கை 14-ஆக உயா்ந்துள்ளது.

இந்த மையத்தில் பெண்களுக்கு எதிரான துன்புறுத்தல், பின்தொடா்தல் உள்ளிட்ட பாதுகாப்பு தொடா்பான புகாா்களை தெரிவிக்கலாம். அந்தப் புகாா்கள் உரிய நடவடிக்கைக்காக சம்பந்தப்பட்ட காவல் நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்படும். மேலும், இ-எஃப்ஐஆா் பதிவு, இணையக் குற்றப் புகாா்கள் அளித்தல், பொருள்கள் தொலைந்தது தொடா்பான புகாா்கள், வாடகைதாரா்கள் மற்றும் வீட்டு வேலை செய்பவா்களின் விவரங்களைச் சரிபாா்த்தல் உள்ளிட்ட சேவைகளும் வழங்கப்படும்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.