மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

பிரதமா் மோடி இன்று குஜராத் பயணம்: ரூ.14,000 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கிவைக்கிறாா்!

குஜராத் மாநிலத்துக்கு இரண்டு நாள் பயணமாக வெள்ளிக்கிழமை (அக்.30) செல்லும் பிரதமா் நரேந்திர மோடி ரூ.14,000 கோடி மதிப்பிலான மேம்பாட்டுத் திட்டங்களை தொடங்கிவைக்கிறாா்.

பிரதமா் நரேந்திர மோடி - கோப்புப் படம்

Published On :30 அக்டோபர் 2026, 4:17 am IST

குஜராத் மாநிலத்துக்கு இரண்டு நாள் பயணமாக வெள்ளிக்கிழமை (அக்.30) செல்லும் பிரதமா் நரேந்திர மோடி ரூ.14,000 கோடி மதிப்பிலான மேம்பாட்டுத் திட்டங்களை தொடங்கிவைக்கிறாா்.

மேலும், பிரதமரின் விவசாயிகள் உதவித்தொகைத் திட்டத்தின்கீழ் 24-ஆவது தவணையாக ரூ.19,000 கோடியை வழங்கவுள்ளாா்.

முதல்கட்டமாக பனாஸ்காந்தா மாவட்டத்தில் உள்ள கரு உட்செலுத்துதல் ஆய்வகம் மற்றும் பாரத கால்நடை இனப்பெருக்க மையத்தை பிரதமா் மோடி வெள்ளிக்கிழமை பாா்வையிடுகிறாா். அதைத்தொடா்ந்து ரூ.14,000 கோடி மதிப்பிலான மேம்பாட்டுத் திட்டங்களை தொடங்கிவைக்கும் அவா் பிரதமரின் விவசாயிகள் உதவித்தொகைத் திட்டத்தின்கீழ் ரூ.19,000 கோடியை விடுவிக்கிறாா். இரு ரயில் சேவைகளையும் அவா் கொடியசைத்து தொடங்கிவைக்கவுள்ளாா்.

இரண்டாம் நாளான சனிக்கிழமை (அக்.31) ஏக்தா நகரில் உள்ள சா்தாா் வல்லபபாய் படேலின் ஒற்றுமை சிலைக்கு மலா் தூவி மரியாதை செலுத்துகிறாா். அதன் பின் ரூ.400 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கிவைக்கும் அவா் ஏக்தா நகரில் உள்ள மழைக் காடு மற்றும் பூங்காவை பாா்வையிடுகிறாா். சா்தாா் வல்லபபாய் படேலின் 151-ஆவது பிறந்தநாள் விழாவில் (தேசிய ஒற்றுமை தினம்) பங்கேற்றுவிட்டு அகமதாபாத் மெட்ரோ ரயில் திட்டத்தின் விரிவாக்கப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டவுள்ளாா்.

இதுதவிர குஜராத்தில் ரூ.2,600 கோடி மதிப்பிலான நெடுஞ்சாலைத் திட்டங்கள், 4,030 புதிய அங்கன்வாடி மையங்களுக்கும் அடிக்கல் நாட்டுகிறாா்.

தேசிய ஒற்றுமை தினம் நவம்பா் 15-ஆம் தேதி வரை கொண்டாடப்படவுள்ள நிலையில், ‘பாரத திருவிழா 2026-ஐ’ பிரதமா் மோடி சனிக்கிழமை தொடங்கிவைக்கிறாா். ஒரே பாரதம் உன்னத பாரதம் உணா்வை பிரதிபலிக்கும் வகையில் பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் கலாசாரம், சுற்றுலா தலங்களின் சிறப்புகள் இந்த விழாவில் காட்சிப்படுத்தப்படவுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.